நிலவு
பேருந்து சன்னலில்
ஒட்டிய ஸ்டிக்கராய்
உடன்வரும் நிலா
என்மன சன்னலில்
உன் நினைவுகளும்....
பேருந்து சன்னலில்
ஒட்டிய ஸ்டிக்கராய்
உடன்வரும் நிலா
என்மன சன்னலில்
உன் நினைவுகளும்....
தனிமரத்தோப்பு
ஒரு பூ மாலையாகாது
ஒரு துளி கடலாகாது
ஒரு இலை கிளையாகாது
ஒரு கிளை மரமாகாது
ஒரு மரம் தோப்பாகாது
ஆனால் நீ
ஒருத்தி மட்டும் எப்படி
உலகமானாய் எனக்கு......
வேறோர் குழந்தையுடன்
விளையாடிக் கொஞ்சினால்
ஓடிவந்தெனைக் கட்டிக்கொள்கிறாள்
செல்ல மகள்.
இப்படித்தான் நீயும்
அன்றோர் நாள்
காதலைச் சொன்னாய்
குழந்தை மனதோடு........
ஒவ்வொரு தேர்வு
எழுதி முடித்ததும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
நல்லா படிச்சிருக்கலாம்.
ஒவ்வொரு முறை
சந்தித்துப் பிரிகையிலும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்....
13 comments:
கவிதை வரிகள் அழகாயிருக்கு.
எளிய வார்த்தைகளில்
இதயம் தொட்டுப்போகும்
அழகிய கவிதைகள்
அருமை அருமை
தொடர வாழ்த்துக்கள்
"இன்னும் கொஞ்சம்" கவிதைகள் எழுதியிருக்கலாம்...படிச்சி ரசிச்சிருப்போம். சூப்பர்ண்ணே. :)
அழகாயிருக்கு.
வியாழன், 28 ஜூலை, 2011 2/2
இன்னும் கொஞ்சம்...
நிலவு
பேருந்து சன்னலில்
ஒட்டிய ஸ்டிக்கராய்
உடன்வரும் நிலா
என்மன சன்னலில்
உன் நினைவுகளும்....
தனிமரத்தோப்பு
ஒரு பூ மாலையாகாது
ஒரு துளி கடலாகாது
ஒரு இலை கிளையாகாது
ஒரு கிளை மரமாகாது
ஒரு மரம் தோப்பாகாது
ஆனால் நீ
ஒருத்தி மட்டும் எப்படி
உலகமானாய் எனக்கு
ஐயா
கலாநேசன் அவர்களே
ஒரு பானை சோற்றுக்கு ஒரு
சோறு பதம் என்பார்களே அது
போல மேலே காட்டியுள்ள
ஒரு கவிதையே போதும்
கலாநேசன் ஒரு கவிதை
தாசன் என உணர!
வாழ்த்துக்கள்
மேலும் என் வலை வந்து
வாழ்த்தினீர்கள் நன்றி!
புலவர சா இராமாநுசம்
தனிமரத்தோப்பு மனதில் சிம்மாசனமிட்டது. பாராட்டுக்கள்.
எளிய வார்த்தைகவிதை வரிகள் பாராட்டுக்கள்.
ஆழ் மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை அழகாக கவிதையில் வடித்துள்ளீர்கள். தொடர வாழ்த்துக்கள்.
அசத்தலான கவிதை வரிகள்..
ரசனையோடு எழுதியுள்ளீர்கள்.ரசிக்கவும் வைக்கிறது.
ரசனை கவிதைகள் அருமை
அனுபவித்த கடைசி வரிகள் நிதர்சனம் !
அருமையான கவிதைகள்.
வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக