ஞாயிறு, 3 ஜூலை, 2011

அப்படியும் இப்படியும்...

நீயென்னை முத்தமிட்டும் 
எழுப்பியிருக்கிறாய் 
காது கிழிய 
சத்தமிட்டும் 
எழுப்பியிருக்கிறாய்!

என் கன்னங்கள் 
வெட்கத்திலும் சிவந்திருக்கிறது.
சிலநாள் அறைவாங்கி 
வீங்கியும் சிவந்திருக்கிறது!

உன் பார்வைகள் 
என்னைத் 
தொட்டும் சிரித்ததுண்டு 
சுட்டும் எரித்ததுண்டு!

உன் ஸ்பரிசத்தில் 
பூக்கள் சிலநாளும்
பூச்சிகள் சிலநாளும் 
நினைவுக்கு வந்ததுண்டு!

உன் சொற்களென்
மனக்காயத்தை
குணமாக்கியதுமுண்டு இன்னும் 
ரணமாக்கியதுமுண்டு!

அத்தனை முரண்களையும் 
அமைதியாய் ஏற்கிறேன் 
அம்மா என்றழைக்கும் 
அன்பு மகனுக்காக.....


31 comments:

ம.தி.சுதா சொன்னது…

நன்றாயிருக்குங்க..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

எல் கே சொன்னது…

நல்லா இருக்குங்க

சேலம் தேவா சொன்னது…

கணவன் : குழந்தை அழுதுகிட்டு இருக்கு.நீ அதை கவனிக்காம சீரியல் பாத்துகிட்டு இருக்க..?!

மனைவி : சும்மா இருங்க..குழந்தையும் சீரியல் பாத்துதான் அழுவுது.

அம்மா எல்லாம் இப்டி மாறிட்டாங்களோ..?!ஹி.ஹி..சும்மா ஒரு ஜோக்குண்ணே..கவிதை நல்லாருக்கு.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

/////
நீயென்னை முத்தமிட்டும்
எழுப்பியிருக்கிறாய்
காது கிழிய
சத்தமிட்டும்
எழுப்பியிருக்கிறாய்!////////

விடியலின் இருபக்கங்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

////
அத்தனை முரண்களையும்
அமைதியாய் ஏற்கிறேன்
அம்மா என்றழைக்கும்
அன்பு மகனுக்காக.....////

முரண்பர்டுகளின் மொத்த உருவம் குழந்தை..

அழகிய கவிதை..
வாழ்த்துக்கள்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

அழகிய கவிதை...
வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உன் பார்வைகள்
என்னைத்
தொட்டும் சிரித்ததுண்டு
சுட்டும் எரித்ததுண்டு!


ம் ம் அழகிய வரிகள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அத்தனை முரண்களையும்
அமைதியாய் ஏற்கிறேன்
அம்மா என்றழைக்கும்
அன்பு மகனுக்காக.....//

அப்படியும் இப்படியும் அல்லாடும் வாழ்க்கைப்படகு.

vidivelli சொன்னது…

உன் சொற்களென்
மனக்காயத்தை
குணமாக்கியதுமுண்டு இன்னும்
ரணமாக்கியதுமுண்டு!



alakaana kavithai....
valththukkal....

குணசேகரன்... சொன்னது…

எப்பவும் போல இன்னிக்கும் பதிவு அருமை.

அம்பாளடியாள் சொன்னது…

அழகிய கவிதை வாழ்த்துக்கள்....

thendralsaravanan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
thendralsaravanan சொன்னது…

அப்படி இப்படி என எப்படியும் உங்கள் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கும் உங்களினிய மனைவிக்கு வாழ்த்துக்கள்.
கவிதை சிறப்பா எழுத உதவுனவுங்க அவுக தானே!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல வார்த்தைகளால் ஒரு கவிதை சமைத்து இருக்கிறீர்கள் சரவணன்…… வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் சொன்னது…

கவிதையும் கருத்தும் அழகு!

ADHI VENKAT சொன்னது…

நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

அம்மா என்றால் எதையும் ஏற்கும் மனநிலை பெண்ணுக்கு இருப்பது உண்மைதான். அருமையான கவிதை..

vidivelli சொன்னது…

நண்பர்களே நம்ம பக்கம் மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம் நீங்களும் யோசித்து பாருங்களேன்

Unknown சொன்னது…

@ ♔ம.தி.சுதா♔ : நன்றி

Unknown சொன்னது…

@ எல் கே : நன்றி

Unknown சொன்னது…

@ சேலம் தேவா :good joke...

Unknown சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் : நேரமிருப்பின் இன்னொரு முறை படியுங்கள். நான் சொல்ல வந்தது புரியவில்லை என்று நினைக்கிறேன்.

Unknown சொன்னது…

@ சே.குமார் : நன்றி

Unknown சொன்னது…

@ சி.பி.செந்தில்குமார் : நன்றி

ஹேமா சொன்னது…

இதுதான் தாம்பத்யமோ.இரண்டு பக்கமுமாய்த் தெரிகிறாள் மனைவி !

ஸாதிகா சொன்னது…

அருமையான கவிதை.பாராட்டுக்கள்.

r.v.saravanan சொன்னது…

உன் ஸ்பரிசத்தில் பூக்கள் சிலநாளும்பூச்சிகள் சிலநாளும் நினைவுக்கு வந்ததுண்டு!

அருமை கலா நேசன்

Yaathoramani.blogspot.com சொன்னது…

சொல்ல நினைப்பதை மிகச் சரியாக சொல்லும்
கலை சிலருக்குத்தான் கைவரப்பெறுகிறது
அதில் நீங்களும் ஒருவர்
கவிதையின் இறுதி வரிகளே அழகான சான்று
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அத்தனை முரண்களையும்
அமைதியாய் ஏற்கிறேன்
அம்மா என்றழைக்கும்
அன்பு மகனுக்காக.....//

அழகிய கவிதை..
வாழ்த்துக்கள்.

கதிரவன் சொன்னது…

கட்டிப்பிடித்தும் கொஞ்சியிருக்கிறாள்
எட்டி உதைத்தும் மிதித்திருக்கிறாள்
-- இதை விட்டுட்டீங்களே நண்பா..

Quote

Followers