ஞாயிறு, 26 ஜூன், 2011

தீமைக்கு எதிராக தீபம் ஏற்றுங்கள்

பிஞ்சுக் குழந்தைகளை 
நெஞ்சோடு இறுக்கி 
பதுங்குக் குழிக்குள் 
தாய்கள் 
பரிதவித்த போதும்...

உரிமை கேட்டவர்களின் 
உயிர்கள் பறித்த போதும் 
பள்ளி செல்லும் மலர்கள் 
முள்வேலியில் வாடியபோதும்...

நம்மினப் பெண்களின் 
கர்ப்பப் பைக்குள் 
சிங்கள நாய்கள் 
விஷம் கலந்தபோதும்...

கண்களை மூடிக்கொண்ட 
கயவர்கள் நாம்.

ஊரையே எரிக்கையில் 
ஊமையாய் இருந்துவிட்டோம் 
இன்றேனும் 
தீபங்கள் ஏற்றி 
தீமையை எதிர்ப்போம்.


இன்று மாலை 5 மணியளவில் மெரினா கடற்கரை கண்ணகி சிலையருகே தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஓர் இடத்தில் கூடி தங்களது அஞ்சலியையும் கோபத்தையும் பதிவு செய்ய இருக்கிறார்கள்.




5 comments:

கவி அழகன் சொன்னது…

ஊரையே எரிக்கையில்
ஊமையாய் இருந்துவிட்டோம்
இன்றேனும்
தீபங்கள் ஏற்றி
தீமையை எதிர்ப்போம்.


நெஞ்சை உருக்கிறது

'பரிவை' சே.குமார் சொன்னது…

Kavithai Kanakkirathu...

vidivelli சொன்னது…

எல்லா வரிகளும் இதயத்தில் அம்பாய் பாய்கிறது
வலிக்கிறது..
அற்புதம்.............

சத்ரியன் சொன்னது…

எத்தனை உதை வாங்கினாலும், “மானாட மயிலாட”-லில் செலுத்தும் கவனத்தை, இனத்தை காக்கும் பக்கம் திருப்பப் போவதாயில்லை... நம் மக்கள்.

ஹேமா சொன்னது…

உணர்வுக்கு நன்றி.கைகளை இறுகக் கோர்த்துக்கொள்வோம் !

Quote

Blog Archive

Followers