கொஞ்சுமொழிக் காரியே
பிஞ்சு நிலவே
பிரியமான மகளே - உனகென்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வேண்டாம் என்பதை
உடனே செய்கிறாய்
வேண்டிக் கேட்பதை
தீண்டிட மறுக்கிறாய்.
பல்துலக்கித் துப்பென்றால்
படக்கென்று விழுங்கிடுவாய்
முகங்கழுவச் சென்றுவந்தால்
முழுவுடம்பும் நனைத்திடுவாய்.
எண்ணெழுதும் புத்தகத்தில்
வண்ணங்கள் தீட்டிடுவாய்.
வண்ணங்கள் தீட்டச்சொன்னால்
எண்ணெழுத வேண்டுமென்பாய்.
முதுகில் கடித்தாலும் - நீயென்
முகத்தில் அடித்தாலும்
வலிப்பதில்லை எனக்கது
இனிக்கவேச் செய்கிறது.
அதிகமாய் சிலநாள்
அடம்பிடிக்கும் உன்னை
அடித்துவிட்டுப் பின்னர்
அழுதிருக்கிறேன் நான்.
தலையாட்டிப் பேசுவதே - முத்
தமிழாக இனிக்கிறது - நீ
விளையாட்டாய் சமைப்பதுவும்
விருந்தெனவே ருசிக்கிறது.
கொஞ்சுமொழிக் காரியே
பிஞ்சு நிலவே
பிரியமான மகளே - உனகென்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
11 comments:
Happy birthday
கவிதை மிக ரசிக்கவைத்தது...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அமர்களமான கவிதை...
நானும் பிறந்தாள் வாழ்த்து தெரிவிக்கிறேன்..
குழந்தைகளின் ஒவ்வொரு அசைவும் ரசிக்கத்தக்கவையே. சும்மாவா சொன்னான். “குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்மழலைச் சொல் கேளாதவர் “குழந்தைகளுடன் இருக்கும் காலம் அனுபவியுங்கள். god bless the child.
குட்டிச் செல்லத்துக்கு எங்களது பிறந்த நாள் வாழ்த்துகள் சரவணன்...
ரோஷ்ணியின் ஸ்பெஷல் முத்தங்களும் உங்கள் செல்ல மகளுக்கு...
நட்புடன்
வெங்கட், ஆதி வெங்கட், ரோஷ்ணி
நிலவைக் கொஞ்சிடும் தங்கள் கவிதை வெகு அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நிலவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
அன்புடன் vgk
அழகான கவிதை!எனது வாழ்த்துக்களையும் தங்கள் குழந்தைக்குத் தெரிவித்து விடுங்கள்!
அன்பைக் கொட்டி அழகிய பரிசை கொடுத்துட்டீங்க...செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
உங்கள் செல்ல மகளுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
கொஞ்சுமொழிக்காரிக்கு வாழ்த்துக்கள்.
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.கவிதை கொஞ்சுகிறது !
கருத்துரையிடுக