வியாழன், 14 ஏப்ரல், 2011

கவிதைப் போட்டி

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அரசியல் பதிவெழுதி நிறையபேர் களைத்துப் போயிருப்பீர்கள். உங்களுக்கு ஒரு ஜாலி சவால். கீழே உள்ள இந்தப் புகைப்படத்துக்குப் பொருத்தமாக கவிதை எழுதுங்களேன்....


அனைவருக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

25 comments:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹி ஹி ஜோக் வேணா எழுதறேன்..

Unknown சொன்னது…

@ சி.பி.செந்தில்குமார் : பலர் கவிதை எழுதறதே ஜோக்காத்தான் இருக்கு. நீங்க ஜோக் எழுதுங்க...

எல் கே சொன்னது…

முயற்சி பண்றேன் .

Unknown சொன்னது…

நான்
என்னைப் பரிசளித்தேன்
பதிலுக்கு நீ
கண்ணீரை மிச்சம் வைத்தாய்..

விரக்தியின் உச்சத்தில்
மீண்டும் மீண்டும்
சந்திக்க முயற்சித்தபோதும்

தற்கொலை முயற்சியிலுங்கூட
தோற்றுப்போனதாய்
உனக்கு தெரியவந்த பின்னும்

ஆறுதலுக்காய் வந்த
நீ
மீண்டும் ஒருமுறை...

வெட்கம் கெட்ட நானும்...

இம்முறை
கைவிடாதிருக்கட்டும்...

ராஜகோபால் சொன்னது…

உனக்காக நான் தொங்குவது நியாயம்
எனக்காக என் நண்பன் தொங்குவது பாவம்
அன்பே நீ என்னை விரும்பவில்லை என்றாலும்
என் நண்பனை விரும்ப கற்றுகொள்.

- அப்பா எப்புடியோ கோத்து விட்டாச்சு?

rajamelaiyur சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

Super idea! வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சரவணன், நமக்கு கவிதையெல்லாம் வராது :) படத்தைப் பார்த்தவுடன் தோன்றியதை கீழே கொடுத்து இருக்கிறேன்.


நண்பேண்டா!

மனிதர்கள் தான் சகமனிதனின் காலை வாரிவிடுவதில் வல்லவர்கள். நண்பனின் காதலுக்கு உதவியாய் இருப்பது போல நடித்து கவிழ்த்து விடுவார்கள். நாங்கள் அப்படி அல்ல என்று சொல்லாமல் சொல்கிறதோ மேலே உள்ள அந்த உயிரினம்?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

அரபுத்தமிழன் சொன்னது…

காதலும் நட்பும்
கைகோர்த்து நடத்திய‌

கவிதைப் போட்டியில்

காதலும் வென்றது
நட்பும் வென்றது

ஆனால்
காதலிதான் பாவம்

இவன் காதலனா
இல்லை தூதுவனா
என அறியாமல்
பூவை நுகர்ந்தவாறே
இருவர் கண்களையும்
துழாவுகிறாள்

சமுத்ரா சொன்னது…

நமக்கும் கவிதை எழுத வராது.. anyway good idea !

தினேஷ்குமார் சொன்னது…

அந்தரந்த்தில் காதல் சொல்ல என்ன
மந்திரம் நீ போட்டாயோ தந்திரத்தால்
எனை ஆட்க்கொண்டு நிலைகொல்லா
நிகழ்தனில் நிம்மதியின்றி நான்...

raji சொன்னது…

என் காதல் உன்னைச் சேர
ஏணியாய் நட்பு வேண்டும்

நம் காதல் நலமாய் வாழ
நல்லதொரு நட்பு வேண்டும்

மொத்தத்தில்

எக்காலத்திலும் எக்காதலும்
எந்ததொரு ஏற்றமடையவும்

சுற்றமும் நட்பும்
சுகமாய் நன்கு அமைதல் வேண்டும்.

அப்படி அமைந்தால்
அதன் பின் இந்த பூ தேவை இல்லை.

நம் காதல் மணக்கையில் பூ எதற்கடி?

Unknown சொன்னது…

படம் நல்லாதான் இருக்கு... ஆனா நமக்கு தான் கவிதையே வராதே... மற்ற நண்பர்கள் வடித்த கவிதைகள் அழகு

G.M Balasubramaniam சொன்னது…

THIS IS IN THANGLISH, AS THIS LAPTOP DOES NOT HAVE TAMIL SOFTWARE DOWNLOADED.

"KAVITHAIP POTTIYIL KALANTHU KOLLA AVAA.
ENNA EZHUTHUVATHU, EZHUTHA ENNUM PORULAE
ENNAVENRU THERIYAATHAPOTHU.

ONRU MATTUM PURIKIRATHU
KAATHALIKKAVUM ITAINJAL UNTU ,
ATHU YAARAAYIRUNTHAALUM
ETHUVAAYIRUNTHAALUM."

Unknown சொன்னது…

@ எல் கே : நிச்சயமா...

Unknown சொன்னது…

@ கே.ஆர்.பி.செந்தில் : 'கை' தடுக்கும் கையில் இருந்து கை கொடுக்கும் கை. முதல் கவிதைக்கு நன்றி அண்ணே.

Unknown சொன்னது…

@ ராஜகோபால் : என்ன ஒரு பொதுநலம்....

Unknown சொன்னது…

@ Raja=Theking :நன்றி

@ Chitra : நன்றி

Unknown சொன்னது…

@ வெங்கட் நாகராஜ் : நல்ல கருத்து நண்பரே!

Unknown சொன்னது…

@ அரபுத்தமிழன் : டவுட்டு!

Unknown சொன்னது…

@ சமுத்ரா : எனக்கும் இந்த படத்திற்கு எழுதத் தெரியலைங்க. அதான் இப்படி ஒரு பதிவு.

Unknown சொன்னது…

@ தினேஷ்குமார் : நல்கவிதை

Unknown சொன்னது…

@ raji : காதல் பூ மலரச்செய்யும் நட்பு!

சிவகுமாரன் சொன்னது…

கைவிடமாட்டேன் காதலி உன்னை
காலைப் பிடித்துக் கெஞ்சாதே
மைவிழியாலெனை மயக்கப் பார்க்கும்
மாதரைக் கண்டு அஞ்சாதே
பூக்கள் நீட்டுவேன் பொய்யாய் நடிப்பேன்
பொறாமை வேண்டாம் காதலியே
தீக்குள் இறக்கி சீதையைப் போல
சோதிக்க வேண்டாம் காதலையே ..

சேலம் தேவா சொன்னது…

இந்த படத்துக்கு உங்க கவிதை எப்பண்ணே வரும்..?!ஆவலுடன் எதிர்பார்த்து....

Quote

Followers