நான் ஒரு தகவல் தொழில்நுட்பப் பொறியாளன். சொந்த ஊர் லால்குடிக்கு அருகில் உள்ள கூகூர். இப்போது சென்னையில் பணிபுரிகிறேன். இரண்டு நாள் விடுமுறையில் ஊருக்குப் போவதற்காக இரண்டு மாதங்கள் முன்னரே குழுத் தலைவர், திட்டத் தலைவர் அப்புறம் ஒரு பெருந்தலைவர் என மூணு பேரிடம் அனுமதி வாங்கினேன். அப்படி இருந்தும் இன்று மாலை பல்லவனைப் பிடிக்கப் போகும் என்னிடம் முக்கிய வேலையோன்றைக் கொடுத்து முடித்துவிட்டுப் போ என்றார்கள். ஏன் தான் இந்தத் தனியார் நிறுவனங்களில் விடுமுறையில் செல்லும் போதெல்லாம் நாம் வேலையை விட்டே போவதுபோல் நடத்துகிறார்களோ தெரியவில்லை. எரிச்சலுடன் அவசர அவசரமாய் கொடுத்த வேலையை முடித்துவிட்டு ஷேர் ஆட்டோ பிடித்து சோழிங்கநல்லூர் வந்தேன். மழை வரும்போல் இருந்தது. நெடுந்தவத்திற்குப் பிறகு நிறைய கும்பலுடன் T51 வந்தது. நெரிசலில் நசுங்கி நின்று கொண்டே வந்த என்னை கிழக்குத் தாம்பரத்தில் துப்பியது பேருந்து.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடைக்கு ஓடினேன். என் குழுத்தலைவனை மீண்டுமொருமுறை ஆங்கில கெட்டவார்த்தையில் திட்டிக் கொண்டே மூச்சு வாங்கி முடிக்கையில் பல்லவன் வந்தது. முன் பதிவு செய்திருந்த என் சன்னலோர இருக்கையில் அமர்ந்ததும் நிம்மதியாய் உணர்ந்தேன். பக்கத்துக்கு இருக்கை காலியாக இருந்தது. எதிரே சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனும் அருகில் அவன் தந்தையும் இருந்தனர். எதிர் இருக்கை இளைஞனின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். என்னைப் பார்த்து சிரித்தான். பின் இன்று தான் முதன்முதலாய் ரயிலைப் பார்ப்பது போல அங்குலம் அங்குலாமாய் பார்வையில் விழுங்கினான்.
சிறிது நேரம் கழித்து அப்பா இங்கே பாருங்கள் வீடு கடைகளெல்லாம் பின்னால் போகுதென்றான். அவன் அப்பாவோ "ஆமாப்பா" என்று சிரித்தார். என்னடா இது சின்னபுள்ளத்தனமா இருக்கே என்று நானும் சிரித்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் சிலிசிலுவென காற்று அடித்தது. அப்பா காற்றைக்கூடப் பார்க்க முடியுமா, அங்கே பாருங்கள் மரங்களின் தலைகலைக்கிறது என்றான். அவன் அப்பாவோ "ஆமாப்பா" என்று சிரித்தார். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து அங்கே பாருங்கள் ஏரி என்றான், அதோ பாருங்கள் குருவி என்றான், இதோ பாருங்கள் பூக்கள் என்றான். அவன் அப்பாவோ வழக்கம்போல "ஆமாப்பா" என்றார். நானோ எனக்கு மட்டும் கேட்குமாறு 35007 என்றேன்.
இவனுக்கு எப்படியும் 25 - 30 வயதிருக்கும். அப்புறம் ஏன் இப்படி பைத்தியக் காரன் போல நடந்து கொள்கிறான் என்று நினைத்து கொண்டிருக்கையில் மெதுவாய் தூர ஆரம்பித்தது. உடனே அவன் கைகளை சன்னலுக்கு வெளியே நீட்டி உள்ளங்கையில் சிறுதுளி பிடித்து அப்பா மழை என்றான். அவர் ஆமாம்பா சொல்வதற்குள் அடக்க முடியாமல் கேட்டே விட்டேன். உங்க பையன ஒரு நல்ல டாக்டர்கிட்ட காட்டலாமே என்றேன். அவரோ கோபப்படாமல் பொறுமையாய் சொன்னார். ஆமாம்பா...டாக்டர்கிட்ட காட்டிட்டுத்தான் வந்தேன். என் மகனுக்கு சிறுவதில் போன பார்வை நீண்ட சிகிச்சைக்குப் பின்னர் இன்று தான் மீண்டும் கிடைத்தது என்றார்.
17 comments:
கதை நன்றாக உள்ளது. நானும் லால்குடிதான்.
ஏப்ரல் பூல் பதிவோன்னு பயந்துகிட்டே படிச்சேன்.அழகான சிறுகதைண்ணே..!! :)
குட் அண்ட் நீட் ஸ்டோரி சார்
அட்டா.. முடிவு பிரமாதம்...
ஆமாம்பா...டாக்டர்கிட்ட காட்டிட்டுத்தான் வந்தேன். என் மகனுக்கு சிறுவதில் போன பார்வை நீண்ட சிகிச்சைக்குப் பின்னர் இன்று தான் மீண்டும் கிடைத்தது என்றார்.
....very touching and heart warming story. Super!
ரொம்ப நல்லா இருந்தது.
சில ஆண்டுகளுக்குமுன்பு எஸ் எம் எஸ்ஸில் வந்தது!
Well written!
அருமையான கதை.
நல்லாயிருக்குங்க கதை!
நல்ல சிறுகதை சரவணன்! கதையிலும் கலக்கிட்டீங்க நண்பரே!
நைஸ்.. :)
எதிர்பார்க்காத முடிவுங்க. நல்லா இருக்கு கதை.தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்.
குட்டிக்குட்டிக் கதைகள் நேர்த்தியாக எழுதுகிறீர்கள் ரசித்துப் படிக்கிறேன். வாழ்த்துக்கள்.
ethir paratha mudivu.sinthika thoonduhirathu ungal kathai.meendum ezhuthuha.best wishes
அருமையான கதை
அருமை தல... ரொம்ப நாட்களுக்கு பிறகு... லால்குடின்னு சொல்லி எனக்கு ஊர் நியாபகத்தையும் கிளப்பி விட்டுடீங்க..
கருத்துரையிடுக