வெள்ளி, 19 நவம்பர், 2010

கானல் நேசம்


காதற்கணவா
நான் கொண்ட
காதல் கனவா.....

அரிதாய்ச் சந்தித்து
அன்பைப் பகிர்கையில்
குறிஞ்சியாய் மலர்ந்தது
நெருங்கி வந்து
நேசம் வளர்க்கையில்
ஆனதேன் நெருஞ்சியாய்...

தாலிகட்டிய புண்ணியத்திற்காய்
தாம்பத்யம் நடத்துகிறாய் - உறவு
வேலிவிட்டு வெளியேறி
வேடிக்கைப் பார்க்கின்றாய்.



உன்னிடம் வேண்டுவது
புன்னகைக்குப் புன்னகையல்ல
அழுகையில் ஆறுதல்.

கீறலைக் கவனித்து
விரைவில் சரிசெய்தால்
விரிசல் என்பதற்கு
வேலை இருக்காது.

கடந்ததை மறந்திடுவோம்
காதல்சொல் மறுமுறை.
கடைத்தெரு செல்கையிலும்
கைகோர்த்து நட...

கைப்பேசித் திரையில் - இந்தக்
காதலியின் படம்வை
பொய்ப்பேசித் தவிர்க்காமல்
புதுப்படம் கூட்டிசெல்....

உற்று நோக்கு
உள்ளுணர் வுணர்
உனைப்பற்றி நான்
எண்ணுவது பிழையென
எண்ணும்படிச் செய்.

வாழ்க்கைச் செடிக்கு
காதல் நீர்தெளிப்போம் - பின்
வளரும் அது
வசந்தகால விருட்சமாய்.

இப்படி
உள்ளத்து ஆசையோ
காதல் தேசம்
உண்மையில் கிடைத்ததோ
கானல் நேசம்.


காதற்கணவா
நீயே சொல்.
நான் கொண்ட
காதல் கனவா.......

27 comments:

Unknown சொன்னது…

A marriage became mirage.

sakthi சொன்னது…

வாழ்க்கைச் செடிக்கு
காதல் நீர்தெளிப்போம் - பின்
வளரும் அது
வசந்தகால விருட்சமாய்.

ஆஹா வளரட்டும் வளரட்டும்
வசந்தகாலம் உங்கள் வாழ்வில் வீசட்டும்!!!

sakthi சொன்னது…

இப்படி
உள்ளத்து ஆசையோ
காதல் தேசம்
உண்மையில் கிடைத்ததோ
கானல் நேசம்.

ஏன் அப்படி நினைக்கறீங்க கலா நேசன்??

ADHI VENKAT சொன்னது…

வெகு அழகு. வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

@ sakthi : உங்கள் பாசத்திற்கு நன்றி. இது கற்பனைக் கவிதைங்க....

@ கோவை2தில்லி : நன்றி

அன்பரசன் சொன்னது…

நல்லா இருக்குங்க.

மனோ சாமிநாதன் சொன்னது…

வார்த்தை ஜாலங்களுடன் கூடிய அருமையான கவிதை!

Unknown சொன்னது…

@ அன்பரசன் : நன்றி
@ மனோ சாமிநாதன் :நன்றி

kavithaigal சொன்னது…

உண்மையான அருமையான வரிகள் . நான் நடை முறை வாழ்க்கையில் அனுபவிக்கும் வலிகள் .

வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com சொன்னது…

..இப்படி
உள்ளத்து ஆசையோ
காதல் தேசம்
உண்மையில் கிடைத்ததோ
கானல் நேசம்....

வரிகள் அருமை...

உயிரோடை சொன்னது…

சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்து படியுங்கள். உங்களிடம் நல்ல கவிதைகளுக்குகான வித்து இருக்கின்றது

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி.

ஜெயசீலன் சொன்னது…

//உன்னிடம் வேண்டுவது
புன்னகைக்குப் புன்னகையல்ல
அழுகையில் ஆறுதல்.// அருமைங்க...

Unknown சொன்னது…

கனவா.. இல்லை காற்றா...

செல்வா சொன்னது…

/உன்னிடம் வேண்டுவது
புன்னகைக்குப் புன்னகையல்ல
அழுகையில் ஆறுதல். //

செம செம .,

//கைப்பேசித் திரையில் - இந்தக்
காதலியின் படம்வை
பொய்ப்பேசித் தவிர்க்காமல்
புதுப்படம் கூட்டிசெல்....//

இந்த வரிகளும் கலக்கலா இருக்குங்க .

"தாரிஸன் " சொன்னது…

//தாலிகட்டிய புண்ணியத்திற்காய்
தாம்பத்யம் நடத்துகிறாய் - உறவு
வேலிவிட்டு வெளியேறி
வேடிக்கைப் பார்க்கின்றாய்//
nalla iruku ... romba.... realitya thotu solreenga

போளூர் தயாநிதி சொன்னது…

உன்னிடம் வேண்டுவது
புன்னகைக்குப் புன்னகையல்ல
அழுகையில் ஆறுதல்.
nalla varigal
polurdhayanithi

'பரிவை' சே.குமார் சொன்னது…

கலக்கலா இருக்குங்க.

Priya சொன்னது…

வரிகள் அருமை....வாழ்த்துக்கள்!

மதுரை சரவணன் சொன்னது…

//உற்று நோக்கு
உள்ளுணர் வுணர்
உனைப்பற்றி நான்
எண்ணுவது பிழையென
எண்ணும்படிச் செய்.//

கவிதை அழகு... வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி சொன்னது…

எனக்கேனோ அழற கவிதைகள் பிடிக்க மாட்டேங்குதே ஏன்?

vanathy சொன்னது…

நல்லா இருக்கு. அருமை.

ஹேமா சொன்னது…

வார்த்தைகளின் விளையாட்டை ரசித்தேன் கலாநேசன்!

Unknown சொன்னது…

@ vittalankavithaigal : வாழ்வின் இப்போதைய கஷ்டங்கள் நிச்சயம் மாறும். ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கைகளில்....
@ சங்கவி : நன்றி
@ உயிரோடை :மிக்க நன்றி. நிச்சயம் படிக்கிறேன்.
@ வெங்கட் நாகராஜ் : நன்றி
@ Jayaseelan : நன்றி

Unknown சொன்னது…

@ கே.ஆர்.பி.செந்தில் : ஆமாண்ணே அதேதான்.
@ ப.செல்வக்குமார் : நன்றி
@ "தாரிஸன் : நன்றி
@ polurdhayanithi : நன்றி
@ சே.குமார் : நன்றி

Unknown சொன்னது…

@ Priya : நன்றி
@ மதுரை சரவணன் : நன்றி
@ விக்னேஷ்வரி : நீங்க வாங்கிவந்த வரம் அப்படி...
@ vanathy : நன்றி
@ ஹேமா : நன்றி

சிவகுமாரன் சொன்னது…

இறுதி வரியில் சொல்லாட்சி அபாரம்

Quote

Followers