புதன், 27 அக்டோபர், 2010

கர்வா சவுத்

நேற்று வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கர்வா சவுத் (KARVA CHAUTH)  கொண்டாடப்பட்டது. திருமணமான இந்துப் பெண்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி நேற்று நிலவு வரும் வரை விரதமிருந்தார்கள் . நிலவு வந்ததும் அதை நீரிலோ, துப்பட்டா அல்லது சல்லடை வைத்தோ பார்த்து பின் கணவன் முகம் பார்ப்பார்கள். "கடவுளே என் கணவனுக்கு ஆரோக்யமான நீண்ட ஆயுள் கொடு, நான் சுமங்கலியாக (இவனைத் தனியே தவிக்கவிட்டுட்டு!) இறக்க வேண்டும்" என வேண்டிக்கொள்வார்கள்.



கர்வா என்றால் மண்கலசம். சௌத் (சௌதா) என்றால் நான்கு( அதாவது கார்த்திகை மாதத்தின் பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள் ). மண் கலசத்தில் நீரையோ அல்லது பாலையோ நிரப்பி அதில் பஞ்ச ரத்தினங்களை இட்டு தானமாகக் கொடுத்து கணவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் பண்டிகை என்று பொருள்.


 அந்த காலத்தில் வெகு தொலைவில் வாக்கப்பட்டுப் போகும் பெண்கள், ஏதாவது  பிரச்சனை என்றால் தங்கள் குடும்பத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ள இயலாது. அதனால் நாத்தனார் அல்லது அருகில் உள்ள குடும்பத்துப் பெண்களை சகோதரியாக ஏற்று பிரச்சனைகளை பேசிக்கொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கவும் இந்தப் பண்டிகை பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது. இன்றோ சாமியார் மடத்தில் பூனை கட்டிய கதையாய், மருதாணி இட்டு வளையல் போட்டு புடவை கட்டும் பண்டிகையாகிப் போனது கர்வா சௌத்.



கர்வா சௌத் அன்று சூரிய உதயத்தில் இருந்து நிலவு வரும் வரை தண்ணீர் கூட குடிக்காமல் பெண்கள் கணவனுக்காக விரதமிருக்கிறார்கள். முன்தினமே கை நிறைய வளையல் வாங்கிக்கொண்டு மருதாணி இட்டுக்கொள்கிறார்கள். அன்று பெரும்பாலும் முகூர்த்த புடவைகளை கட்டிக்கொண்டு தெருவில் உள்ள பெண்களெல்லாம் ஒன்றாய் கூடி பூஜை செய்கிறார்கள்.
 உதயநிலா 
அன்று 
சந்திரனைப் பார்த்த 
சல்லடைத் தட்டுவழி 
இந்திரனைப் பார்த்தாள்
ரதி - அதன்பின் 
ஒவ்வொரு நாளும் 
விடிகிறது அவனுக்கு 
உதயநிலா முகம் பார்த்து...

18 comments:

சேலம் தேவா சொன்னது…

நம்ம இந்திய பெண்கள நினைக்கும்போது கர்வமா இருக்குண்ணே..!!கர்வா சவுத் ன்னு பேர் வச்சுட்டு ஏண்ணே நார்த்ல மட்டும் கொண்டாடுறாங்க..?!

சிவராம்குமார் சொன்னது…

நம்ம சோனியா அகர்வால் கூட ரவி கிருஷ்ணாவை பாக்குமே! 7G ரெயின்போ காலனில... அதான இது...
அந்த கவிதையோட பினிஷிங் டச் சூப்பர்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

”கர்வா சௌத்” பற்றிய உங்கள் இடுகை நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

வெங்கட்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சுவாரசியாமான பதிவு... நல்லாயிருக்கு..

அருண் பிரசாத் சொன்னது…

அட நம்ம 7ஜி ரெயின்போ காலனி பண்டிகை இன்னைக்குதானா!

Chitra சொன்னது…

தகவல்களும் படங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.

R. Gopi சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

துளசி கோபால் சொன்னது…

நல்ல பதிவு.

ஒரு தகவல் பிழை இருக்குங்க. இது ஐப்பசி மாசம் வரும் பவுர்ணமிக்கு நாலாம் நாள் வரும்.

நானும் அதன் 'கதை'யோடு ஒரு பதிவு போட்டேன் ஒரு அஞ்சு வருசம் முந்தி, இன்னிக்கும் ஒன்னு போட்டுருக்கேன். நேரம் இருந்தால் பாருங்க.

விக்னேஷ்வரி சொன்னது…

நான் கொண்டாடியாச்சு.

செல்வா சொன்னது…

நானும் கேள்விப்பட்டிருக்கேனுங்க ..!

vanathy சொன்னது…

சூப்பர் தகவல்கள்.

Unknown சொன்னது…

@ சேலம் தேவா : ஆஹா....
@ சிவா : நன்றி
@ வெங்கட் நாகராஜ் : நன்றி
@ வெறும்பய : நன்றி
@ அருண் பிரசாத் : ஆமாம்
@ Chitra : நன்றி
@ Gopi Ramamoorthy : நன்றி

Unknown சொன்னது…

@ துளசி கோபால் :வாங்க வாங்க...நன்றி.

//ஒரு தகவல் பிழை இருக்குங்க. இது ஐப்பசி மாசம் வரும் பவுர்ணமிக்கு நாலாம் நாள் வரும்.//
அது பிழை இல்லீங்க... நான் சொன்னது ஹிந்தி கார்த்திகை.
நம்ம தமிழ் மாதங்களையும் ஹிந்தி மாதங்களையும் குழப்பிகிட்டீங்க..

ஹிந்தில மாதங்களின் பெயர்கள் இதோ
Chaitra
Vaishākh
Jyaishtha
Āshādha
Shrāvana
Bhaadra or, Bhādrapad
Āshwin
Kārtik
Agrahayana or, Mārgashīrsha
Paush
Māgh
Phālgun

Unknown சொன்னது…

@ விக்னேஷ்வரி :எங்க வீட்லயும் பாதி கொண்டாடினாங்க...முதலிரண்டு புகைப்படம் அவளுடையதே..
@ ப.செல்வக்குமார் : நன்றி
@ vanathy : நன்றி

துளசி கோபால் சொன்னது…

அடடா.............

'கார்த்திக்' மாசத்தைக் 'கார்த்திகை' மாசமுன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டேனே:(

அந்நியன் சொன்னது…

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல கருத்துள்ள பண்டிகை.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Quote

Followers