ஞாயிறு, 10 அக்டோபர், 2010

அமுதான தேன் விஷமாவதேன்?

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்தேன் எனநான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்.
கொடித்தேன் இது எங்கள் குடித்தேன் என
ஒரு படி தேன் பார்வையில் குடித்தேன்
துளிதேன் சிந்தாமல் களித்தேன் - ஒரு
துளிதேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன்.


அடடா.... சொல்ல வந்தத விட்டுட்டு பாடல் வரிகள் போயிட்டே இருக்கே....தேனில் ஊறிய கவியரசரின் தித்திக்கும் வரிகள். (அப்பாடா திரும்பவும் பதிவுக்கு வந்தாச்சு.)



தேன். காலங்காலமாக நம் வாழ்க்கையில் அங்கம் வகிக்கிறது. தேனைப் பற்றிய குறிப்பு ரிக் வேதத்திலேயே உள்ளது. உணவாய் மருந்தாய் அன்றாட வாழ்வில் நாம் தேனைப் பயன்படுத்துகிறோம். என்னது....தேனின் பயன்கள் என்னவா? பங்காளிகிட்ட கேளுங்க. (என்னது பங்காளி யாரா?).


தேன் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும், நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அப்படின்னு நினைத்து அடிக்கடி தேன் உண்பவரா நீங்கள். உங்களுக்குத்தான் இப்பதிவு.



தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE ) தில்லியில் அதிகமாய் விற்பனையாகும் 12 கம்பெனிகளின் தேன்களை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் நோக்கம் தேனில் கலந்துள்ள வேதிப்பொருட்களை கண்டறிவது. இதுவரை நாம் இயற்கையான சுத்தமான தேன் என்று விளம்பரத்தைப் பார்த்து நம்பிக் கொண்டிருந்த அத்தனைத் தேனிலும் (Hitkari தேனைத் தவிர) ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆன்டிபயாடிக் என்ற வகையைச் சேர்ந்த நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் கலந்துள்ளன. ஆக்சிடெட்ராசைக்ளின், க்லோராம்பிநிக்கால், அமாக்சிசிலின், சிப்ரோப்லோக்சசின், எரித்ரோமய்சின் மற்றும் என்றோப்லோக்சசின் ஆகிய மருந்துகள் தேனில் கலந்துள்ளன.


இவையெல்லாம் மருந்துகள் தானே சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுதானேன்னு கேக்றீங்களா?
தேவை இல்லாத போது மருந்து உட்கொண்டால் நம் உடல் அந்த மருந்துக்கு பழகிடும். அப்புறம் நோய் வரும் போது அந்த மருந்தால் குணமடையாது. அது மட்டுமல்லாமல் அடிக்கடி உட்கொள்ளும் மருந்துகளால் பக்க விளைவுகளும் வரும். உதாரணத்திற்கு நீங்கள் உண்ணும் தேனிலோ/உணவிலோ ஆக்சிடெட்ராசைக்ளின் தொடர்ந்து இருந்தால் இரத்த சம்பந்தமான நோய்கள் வரும். ஈரல் பாதிப்படையும்.



அது சரி. இந்த மருந்துகளெல்லாம் எப்படி தேனில் கலந்தன?
1965-ல் பஞ்சாப் விவசாயப் பல்கலைகழகம் இத்தாலியில் இருந்து கொண்டுவந்த புதிய வகைத் தேனீக்களை அறிமுகம் செய்தது. இந்திய தட்பவெட்பம் ஒத்துவராமல் அடிக்கடி அவை நோய்வாய்ப்பட்டதால் தேனீ வளர்ப்பவர்கள் அதற்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் அதிக உற்பத்திக்காக ஆக்சிடெட்ராசைக்கிலினும் தெளிக்க ஆரமித்தனர். நாளடைவில் மருந்து தெளிப்பது கட்டாயமாகிவிட்டது. 
சீப்பாய்க் கிடைக்கிறதென்று சீனாவில் இருந்து இறக்குமதி செய்யாமல் சிறு வியாபாரிகளிடம் இருந்து தேனை வாங்குவதால் தான் Hitkari தேனில் மருந்துகள் எதுவும் இல்லையாம்.



தேனுக்கென்று தரக் கட்டுப்பாடுகள் கிடையாதா?
இருக்கு....ஆனா இல்ல. அதாவது இந்தியாவில் விற்கப்படும் தேனுக்கென்று சில அடிப்படைச் சோதனைகள் மட்டுமே உள்ளது. (அதாவது சக்கரை எவ்வளவு இருக்கு? ஈரப்பதம் எவ்வளவு இருக்கு?). அதே சமயம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் தேனுக்கென்று தனியே கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் உள்ளன. (ஆன்டிபயாடிக் கலப்பட சோதனை உட்பட). இதைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு மட்டும் சுத்தமானத் தேனை அனுப்பிவிட்டு கலப்படத் தேனை இந்தியாவில் விற்கிறார்கள்.
ஆஸ்திரேலியா மற்றும் சுவிசில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் தேனிலும் இதே நிலைதான். அதே சமயம் அவர்கள் நாட்டில் அதே கம்பனிகள் விற்கும் தேன் தரமானது.

 சரி கடையில் கிடைக்கும் எல்லா வகைத் தேனிலும் மருந்து கலந்துள்ளதே... இப்போ என்ன செய்யலாம்? 
  1. பாலுடன் கலந்து குடித்து பயில்வானாகிறேன், சுடுதண்ணியில் கலந்து குடித்து சுள்ளானாகிறேன் என தினமும் தேன் குடிப்பதைத் தவிருங்கள்.
  2. விளம்பரங்களைப் பார்த்து இது இயற்கையானது, சுத்தமானது குழந்தைகள் வளர கட்டாயம் தேவை என்று நம்பி குழந்தைகளுக்கு தினமும் தேன் கொடுக்காதீர்கள். அது அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கலாம்.
  3. 'மாலையில்  சந்தித்தேன்  மையலில்  சிந்தித்தேன்   காதலர் தீண்டும் போது கைகளை   மன்னித்தேன்' - இது போன்ற பாடல்கள் கேட்டு செவிவழி மட்டும் தேனருந்தலாம்.                                                                                                           

20 comments:

Unknown சொன்னது…

No HONEY...... It is only MONEY

பெயரில்லா சொன்னது…

எங்கேயோ ப்டித்தேன், எண்ணங்களைப் பதித்தேன் என்று இல்லாமல் சிறப்பாக சிந்தித்து பதித்துள்ளீர்கள் உங்கள் பதிவை.

எட்டு வருடங்களாக நித்தமும் காலையில் ரொட்டி (ப்ரெட்), கடலை புண்ணாக்குடன் (பீ-நட் பட்டர்), தேனும் சாப்பிடுகிறேன். ஆசை ஒன்றும் இல்லை, இதை உண்ண. அவசர உலகத்தில் இது போன்ற உணவு சகஜம் தானே.

தேனில் இவ்வளவு மாற்றங்களா? அறிந்தேன், அதிர்ந்தேன்.

இதையே மனையாளிடம் காட்டி, இட்லி, தோசைக்கு ஒரு அடிவாரம் போட வேண்டியது தான்.

கலப்படமில்லாத படித்தேன் குடித்த மகிழ்ச்சி.

வெங்கி

Chitra சொன்னது…

வெளிநாட்டுக்கு மட்டும் சுத்தமானத் தேனை அனுப்பிவிட்டு கலப்படத் தேனை இந்தியாவில் விற்கிறார்கள்.


.....அவ்வ்வ்வ்....... என்ன கொடுமை சார், இது?

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அட, இதுல இவ்ளோ விஷயம் இருக்கா!! பகிர்வுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நண்பரே...
வேளைப்பளூவின் காரணமாக சில நாட்களாக உங்கள் பதிவுகளை படிக்கவில்லை. இன்றுதான் பார்த்தேன் அனைத்தும் அருமை.

தேன் குறித்த உங்கள் செய்திகள் மிகவும் அருமை.

வாழ்த்துக்கள்.

R. Gopi சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

பின்னோக்கி சொன்னது…

செய்தித்தாள்களில் படித்தேன். அருமையாக தொகுத்து எழுதியிருக்கிறீர்கள். hitkari மட்டும் தான் சாப்பிடணும்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

குட் போஸ் கலா நேசன்!

கவி அழகன் சொன்னது…

பாட்டில தொடங்கி மருந்தில முடிச்சிடிங்க வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி சொன்னது…

நல்ல பகிர்வு கலாநேசன்.

செல்வா சொன்னது…

//ஆனா இல்ல. அதாவது இந்தியாவில் விற்கப்படும் தேனுக்கென்று சில அடிப்படைச் சோதனைகள் மட்டுமே உள்ளது. (//

தேனில் கலப்படம் செய்யுறாங்க அப்படிங்கிறத நானும் படிச்சிருக்கேங்க ..
என்ன கொடுமையோ ..! இனி தேன் சாப்பிடனும்னா நம்ம ஊர்ல நம்ம கையாள எடுக்குற தேனை குடிக்கலாம் ..

சேலம் தேவா சொன்னது…

"தேன்" பதிவை பார்த்து அதிர்ந்"தேன்".
நன்றிண்ணே..!!

Unknown சொன்னது…

அட இதிலுமா ..?

ஹேமா சொன்னது…

தேன் தேன் வாசித்தேன்.எதிர்ப்புச் சக்தி நிறைந்த மூலிகையும் கூட தேன்.

vanathy சொன்னது…

very useful informations.

அன்புடன் மலிக்கா சொன்னது…

வெளிநாட்டுக்கு மட்டும் சுத்தமானத் தேனை அனுப்பிவிட்டு கலப்படத் தேனை இந்தியாவில் விற்கிறார்கள்.


.....அவ்வ்வ்வ்....... என்ன கொடுமை சார், இது?//

இருந்தாலும் கொடுமையிலும் கொடுமைதான் இல்லையா சித்ராக்கா..

கொடுமைலும் கொஞ்சூண்டு நன்மை அப்ப நாங்க சாப்பிடுவது சுத்தமான தேனா அப்பாடா..

ஒருகண்ணில் வெண்ணை மறுகண்ணில் சுண்ணாம்பு
அம்மாடியோ..

நல்லதகவல்

ஸாதிகா சொன்னது…

தேனைப்பற்றிய அருமையான தகவல்களுக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வு நண்பரே. தொடருங்கள்.

பெயரில்லா சொன்னது…

plz visit this website http://www.youtube.com/watch?v=skQqSWKPGLU

பெயரில்லா சொன்னது…

http://www.youtube.com/watch?v=j7bbZbKUTWA&feature=related

Quote

Followers