சனி, 24 ஜூலை, 2010

குட்டிக் கவிதைகள்-2

 நிலவு
பேருந்து சன்னலில் 
ஒட்டிய ஸ்டிக்கராய்
உடன்வரும் நிலா
என்மன சன்னலில்
உன் நினைவுகளும்....


'இடைத்' தேர்தல் 
குடிநீருக்காய் சண்டையிடும்
குடிமக்கள் மத்தியில்
குடங்கள் போட்டியிடும்
உன்னிடைத் தேர்தலில்
யார் வெல்வதென்று....



தனிமரத் தோப்பு
ஒரு பூ மாலையாகாது 
ஒரு துளி கடலாகாது
ஒரு இலை கிளையாகாது
ஒரு கிளை மரமாகாது
ஒரு மரம் தோப்பாகாது
ஆனால் நீ
ஒருத்தி மட்டும் எப்படி
உலகமானாய் எனக்கு......



குட்டிக் கவிதைகள்-1

20 comments:

Chitra சொன்னது…

ஒரு பூ மலையாகாது


.....மாலை ஆகாது....

Chitra சொன்னது…

தனிமரத் தோப்பு
ஒரு பூ மலையாகாது
ஒரு துளி கடலாகாது
ஒரு இலை கிளையாகாது
ஒரு கிளை மரமாகாது
ஒரு மரம் தோப்பாகாது
ஆனால் நீ
ஒருத்தி மட்டும் எப்படி
உலகமானாய் எனக்கு......


.... Beautiful! Very nice.

Unknown சொன்னது…

எழுத்துப் பிழையை திருத்தி விட்டேன். நன்றிங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நல்லா இருக்கு தலை

சீமான்கனி சொன்னது…

//ஒருத்தி மட்டும் எப்படி
உலகமானாய் எனக்கு......//

அழகு நேசன் சார்...

//மாலையாகது//....மாலையாகாது

எல்லாமே எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு...வாழ்த்துகள்...

Unknown சொன்னது…

இடைதேர்தலில் ஓட்டு போட்டுவிட்டேன்

Karthick Chidambaram சொன்னது…

//ஒரு பூ மாலையாகாது
ஒரு துளி கடலாகாது
ஒரு இலை கிளையாகாது
ஒரு கிளை மரமாகாது
ஒரு மரம் தோப்பாகாது
ஆனால் நீ
ஒருத்தி மட்டும் எப்படி
உலகமானாய் எனக்கு.....//

நல்லா இருக்கு

sakthi சொன்னது…

innum konjam different aa try seyyunga!!!

தூயவனின் அடிமை சொன்னது…

பேருந்து சன்னலில்
ஒட்டிய ஸ்டிக்கராய்
உடன்வரும் நிலா
என்மன சன்னலில்
உன் நினைவுகளும்....

அருமையாக உள்ளது.

ஸாதிகா சொன்னது…

கவிதை அழகுற எழுதி இருக்கீங்க.அதிலும் "தனிமரத்தோப்பு" சூப்பர்.

Unknown சொன்னது…

சீமான்கனி சொன்னது…
//மாலையாகது//....மாலையாகாது

எனக்கு மாலை கட்டி பழக்கமில்லை அதான் சரியாய் வரமாட்டேன்குது. (அப்புறம் இங்க்ளிஸ்ல டைப்பி தமிழ் எழுதுறத பத்தி தனி பதிவே போடலாம்).

Unknown சொன்னது…

sakthi சொன்னது…
innum konjam different aa try seyyunga!!!

சிந்திக்க வைத்த கருத்து. முயல்கிறேன். நன்றி

Unknown சொன்னது…

ரமேஷ்
செந்தில்
கார்த்திக்
இளம் தூயவன்
அன்பரசன்
ஸாதிகா

நன்றி.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அத்தனையும் அருமை தோழரே..

ரிஷபன் சொன்னது…

அட.. ஆஹா.. ம்ம்..
மூன்றுமே ரசிக்க வைத்தன..

பின்னோக்கி சொன்னது…

அழகான வரிகள். அருமை

R.Santhosh சொன்னது…

kalakkureenga basu idai therthal sooperaa irukku

விக்னேஷ்வரி சொன்னது…

ஓகே, ரைட்.

அன்புடன் நான் சொன்னது…

முத்துக்கள் மூன்று... பாராட்டுக்கள்.

ஹேமா சொன்னது…

எல்லாமே ரசிக்கக்கூடிய வரிகள்.

Quote

Followers