புதன், 16 ஜூன், 2010

பஞ்சாபில் பயங்கரம்

போபாலில் 3787 பேர் இறந்து போய் 26 வருடம் கழித்து அங்கு நடந்தது விபத்தா? வினையா? என்று தீர்ப்புக்கு எதிராய் போர்க்கொடி தூக்கும் நல்லவர்களே!
இதோ உங்கள் கண்முன்னே செத்துக்கொண்டிருக்கும் உயிர்களைப் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்.

பஞ்சாபில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முடிகளில் நடத்திய ஆய்வில் அளவுக்கதிகமான யுரேனியம் அவர்கள் உடலில் கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள மால்வா பகுதி வேதிப்பொருட்கள், கதிரியக்கம், உயிர் நச்சு என முக்கியமான மூன்று வழிகளிலும் மாசடைந்துள்ளது.

பஞ்சாபில் மூன்று மாவட்டங்களின் குடிநீரில் அளவுக்கு அதிகமான நைட்ரஜென் கலந்திருக்கிறது. இதை குடிப்பவர்களுக்கு புற்றுநோயும், பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடும் வரும் வாய்ப்புகள் அதிகம். இது நிச்சயமாய் இங்குள்ள தொழிற்சாலை கழிவுகளாலும், விவசாய நிலத்தில் அளவுக்கு அதிகமாய் யூரியா பயன்படுத்துவதாலும் தான்.

இங்கு முதலமைச்சரின் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 1074 பேர் புற்று நோயால் இறந்து போயுள்ளனர் (1991-2009). இன்னும் 668  பேரின் நிலமை கவலைக்கிடம். அனுதினமும் 1144 லிட்டர் கழிவு நீர் சட்லட்ஜ் ஆற்றில் கலக்கிறதாம்.


மீண்டும் கேட்கிறேன்,
போபாலில் 3787 பேர் இறந்து போய் 28 வருடம் கழித்து அங்கு நடந்தது விபத்தா? வினையா? என்று தீர்ப்புக்கு எதிராய் போர்க்கொடி தூக்கும் நல்லவர்களே!
இதோ உங்கள் கண்முன்னே செத்துக்கொண்டிருக்கும் உயிர்களைப் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்.
இதற்கு என்ன செய்யப் போகிறோம் நண்பர்களே!

15 comments:

Chitra சொன்னது…

லஞ்சம் வாங்கி பொட்டியை நிரப்புரதை தவிர ...... இதையெல்லாம் அரசியல் கட்சிகள் கவனிக்காதா?

அன்புடன் நான் சொன்னது…

மக்கள் போராடி பெறபோவது எதை?
நல்ல மனதர்களை நாடாள வைத்தால் எதற்கும் போராட வேண்டிய அவசியம் இல்லை. (குறைந்த பச்சம் பாதுகாப்புடன் வாழலாம்... நாட்டை அடகு வைக்காது இருக்கலாம்)
போபாலும் தட்டி கேட்க வேண்டியதுதான்... இல்லையேல் அவர்களின் “தீர்ப்பு” சரினென ஆகிவிடும்.
பகிர்வுக்கு நன்றிங்க.

விஸ்வாமித்திரன் சொன்னது…

மிகவும் அர்த்தமுள்ள பதிவு. போஸ்ட் மார்டம் செய்வதை விட சாகிறவர்களை காப்பாற்றும் வைத்தியம் தான் தேவை என்பதை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

சௌந்தர் சொன்னது…

நல்ல சொன்னிங்க பாஸ்.

மரா சொன்னது…

//மீண்டும் கேட்கிறேன்,
போபாலில் 3787 பேர் இறந்து போய் 28 வருடம் கழித்து அங்கு நடந்தது விபத்தா? வினையா? என்று தீர்ப்புக்கு எதிராய் போர்க்கொடி தூக்கும் நல்லவர்களே!
இதோ உங்கள் கண்முன்னே செத்துக்கொண்டிருக்கும் உயிர்களைப் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்.
இதற்கு என்ன செய்யப் போகிறோம் நண்பர்களே!//

நல்ல பகிர்வு. நீங்க இந்த விசயத்த சொல்லொயிருகீங்க. இன்னும் சில பேர் போபால் மற்றும் ஏனைய விசயங்களை பதிவு பண்ணியிருக்கிறார்கள்.யாராலயும் என்ன செய்திட இதுபோல பதிவு எழுதி ஆதங்கப்படுவதை விட?

இப்போ நான் ஒரு பதிவு எழுதி சென்னையில நடக்கிற,நடந்த கொடுமையை எழுதி ‘பஞ்சாப்பில் நடக்கும் கொடுமைக்கு எதிராய் போர்க்கொடி தூக்கும் நல்லவரகளே! இதுக்கு என்ன சொல்றீங்க?’ அப்டின்னு பதிவு போட்டா நல்லாவா இருக்கும். கருத்துக்களை தாராளமாக பதியுங்கள். இதுபோன்ற எள்ளல் வார்த்தைகள் வேண்டாமே. நட்புடன் - மயில்ராவணன்.

ஜெயந்தி சொன்னது…

மக்களைப் பற்றி யாருக்கென்ன கவலை?

விக்னேஷ்வரி சொன்னது…

ஓஹோ, மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இது குறித்து மேலதிக விவரங்கள் கொடுக்க முடியுமா கலாநேசன்.. எந்த ஊரில், மாவட்டத்தில், இன்னும் ஆழமாக இதைப் பற்றிய தகவல் தெரியுமாயின் எனக்கு மெயிலுங்கள். மெய்ல் ஐ.டி. என் ப்ரொஃபைலில் உள்ளது.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்ல பதிவு, பொஸ்ட் மார்ட்டம் தேவை, அதே நேரத்தில் இதுபோல் நடப்பு பிரச்சனைகளை அவரகதியில் கவனிக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் இதுபோல் எங்கேனும் உள்ளதா என்று அறிந்து சொன்னால் நலமாக இருக்கும்!

வால்பையன் சொன்னது…

நொய்யல், காவேரி கரையிலும் இது நடக்க ரொம்ப நாள் ஆகாது!, வரும்முன் காக்க ஆவன செய்யனும்!

Unknown சொன்னது…

Thank you all. i am in office tour.
mayil raavanan ungalukku ennudaiya vilakkathaiyum, vigneshwari ungalukku mailum vanthu tharukiren.

ஹேமா சொன்னது…

அரசியல் மக்களுக்காக என்பதெல்லாம் பொய்.
அது வேறு.மக்கள் வேறு !

சு.பரணி கண்ணன் சொன்னது…

மிகவும் தவறான புரிதலை ஏற்படுத்தும் கருத்து, நேற்று என்ன நடந்த்து என்பதை தெரிந்தால் மட்டுமே இன்று நடப்பதை சரியாகப் புரிந்து கொள்ள முடியும், நாளை என்ன நடக்கலாம் என்பதை ஊகிக்க முடியும். வரலாறு மிக முக்கியம்.

பரணி

Unknown சொன்னது…

//இப்போ நான் ஒரு பதிவு எழுதி சென்னையில நடக்கிற,நடந்த கொடுமையை எழுதி ‘பஞ்சாப்பில் நடக்கும் கொடுமைக்கு எதிராய் போர்க்கொடி தூக்கும் நல்லவரகளே! இதுக்கு என்ன சொல்றீங்க?’ அப்டின்னு பதிவு போட்டா நல்லாவா இருக்கும். கருத்துக்களை தாராளமாக பதியுங்கள். இதுபோன்ற எள்ளல் வார்த்தைகள் வேண்டாமே. நட்புடன் - மயில்ராவணன்.//
அன்பு மரா,
உங்கள் உண்மையான கருத்துகக்கென் உளமார்ந்த நன்றி. நான் இதை எழுதியது போபாலுக்காய் போராடுபவர்களை புண்படுத்த அல்ல. நம்மைப்போல் வேதனைப்பட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் வேறெதுவும் செய்ய முடிவதில்லை. அதனால் தான் அதற்குப் போராடுபவர்களே இதையும் பாருங்கள் என்று சொன்னேன்.

Unknown சொன்னது…

//மிகவும் தவறான புரிதலை ஏற்படுத்தும் கருத்து, நேற்று என்ன நடந்த்து என்பதை தெரிந்தால் மட்டுமே இன்று நடப்பதை சரியாகப் புரிந்து கொள்ள முடியும், நாளை என்ன நடக்கலாம் என்பதை ஊகிக்க முடியும். வரலாறு மிக முக்கியம்.//

அன்பு பரணி

உங்கள் தவறான புரிதலுக்காய் வருந்துகிறேன். போபாலில் மீத்தைல் ஐசோ சயனைடு எப்படி காற்றில் கலந்தது? இது யார் தவறு? அதற்குப்பின் தொழிற்சாலைகளில் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? பாதுகாப்பை உறுதி செய்ய சட்டம் ஏதேனும் செய்தார்களா? மக்களின் விழிப்புணர்வு நிலை என்ன? இப்படி ஏராளமான கேள்விகளுக்கு விடை காண வேண்டடியது அவசியம் தான். ஆனால் நான் சொல்ல வந்தது இதையும் பாருங்கள் என்று.

Karthick Chidambaram சொன்னது…

உங்கள் கோபம் புரிகிறது. ஏதாவது செய்யவேண்டும்.

Quote

Followers