சனி, 12 ஜூன், 2010

பாப்பா பாட்டு

உலக வலைப்பூ வரலாற்றில் முதல் முறையாக என் செல்ல மகள் தியானாவுடன்  ஒரு தித்திக்கும் உரையாடல்.


நான்: உங்க பேர் என்ன?
அவள் : தியானா (நீ தான பேர் வச்ச. அதயேன் திரும்பத் திரும்ப நீயே கேக்குற. யாராவது தெரியாதவங்க கேட்டா பரவால...)


நான்: அப்பா பேர் என்ன?
அவள் : ணன்
நான்: அம்மா பேர் என்ன?
அவள் : டோமா

நான்: என்ன பாட்டு பிடிக்கும் ?
அவள் : குவா குவா வாத்து
              அம்மா இங்கே வா வா
              வர்றான் வர்றான் பூச்சாண்டி
              clap your hands
              chubby cheeks
              டாடி மம்மி
              old mc donald
              துஷ்யந்தா
              கியாம் கியாம் குருவி 
            ............................
நான்: போதும் போதும். பாட்டு லிஸ்ட் சொல்லி சோர்ந்து போயிருப்பீங்க. என்ன குடிகிறீங்க. வெறும் பாலா? சாக்லேட் பாலா(Horlicks)?
அவள் : வெறும் சாக்லேட்!!!

நான் : சரி ஒரு கதை சொல்லுங்க.
அவள் : மம் மம் பாட்டி (அவளோட அம்மாவோட அம்மா ) வடைஐ சுட்டாங்களா, அப்ப காக்கா வந்து ஒரு வடைய தூக்கிட்டு போயி ட்ரீ மேல உக்காந்துகிச்சாம். அப்போ ஒரு fox  வந்து காக்கா காக்கா நீ ரொம்ப அழகா இருக்க, ஒரு பாட்டு பாடுன்னு சொன்னுச்சாம். காக்கா கா கான்னு பாடும் போது வடை டம்முன்னு கீழ விழுந்துச்சாம். அத FOX மம் மம்னு சாப்டுசாம். அப்போ அந்த காக்கா சொன்னுச்சாம் வட போச்சே!

தியானாவுக்கு வரும் புதன் கிழமை இரண்டாவது பிறந்த நாள்.

(அவளுக்கு பிடித்த பாடல்களின் லிங்க் கொடுத்துள்ளேன். நேரமிருப்பின் உங்கள் குழந்தைக்கு காட்டுங்கள்)

29 comments:

எல் கே சொன்னது…

happy birthday wishes to diyaanaa

விக்னேஷ்வரி சொன்னது…

உலக வலைப்பூ வரலாற்றில் முதல் முறையாக //
சன் டி.வி. அதிகம் பார்க்காதீங்க.

க்யூட் இண்டர்வியூ. உங்க ஸ்வீட்டிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தியானாவுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

KANA VARO சொன்னது…

வித்தியாசமான பதிவு

மகளுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுங்கள்

அன்புடன் நான் சொன்னது…

தியாவுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பேட்டி மிக அழகு.

இது என்னங்க அம்மாவோட அம்மா? ஏன் அப்பாவோட அம்மாவா இருக்க கூடாதா?

Unknown சொன்னது…

LK
விக்னேஸ்வரி
ரமேஷ்
KANA VARO
சி.கருணாகரசு
மிக்க நன்றி.

//சி. கருணாகரசு சொன்னது…
இது என்னங்க அம்மாவோட அம்மா? ஏன் அப்பாவோட அம்மாவா இருக்க கூடாதா?//

அவ அம்மாவோட அம்மாவுக்கு வச்ச பேரு மம் மம் பாட்டி.

அப்பாவோட அம்மா பேரு சேலம் பாட்டி.

Karthick Chidambaram சொன்னது…

அருமையான நேர்காணல் . மிகவும் ரசித்தேன்.
அடிக்கடி அவங்களை நேர்காணல் எடுங்கள்.
இதன் அழகே தனி.

Karthick Chidambaram சொன்னது…

தியானாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

பிரிய தியானாவுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Muruganandan M.K. சொன்னது…

தியானாவுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

"உலக வலைப்பூ வரலாற்றில் முதல் முறையாக .." சுவார்ஸமாக ஆரம்பித்து சுவார்ஸம் கெடாமல் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தீர்கள்.

பா.ராஜாராம் சொன்னது…

cute! :-)

பிறந்த நாள் வாழ்த்துகள்டா தியாம்மா!

Asiya Omar சொன்னது…

தியானா
தித்திக்கும் அழகு பொண்ணு
திரித்த கதை அருமை
திக்கெங்கும் புகழ் பரவ
திறம்பட நீடுழி வாழ
வாழ்த்துக்கள்....

Swengnr சொன்னது…

சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!

JEGANKUMARSP சொன்னது…

Kalakura Saravana... Keep it up!

Unknown சொன்னது…

கார்த்திக் சிதம்பரம்
செந்தில்
Dr .முருகானந்தம்
பா.ராஜாராமன்
மிக்க நன்றி. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

ஆசியா ஓமர்:
தியனாவுக்காக
திடீர் கவிஎழுதி
திக்குமுக்காடச் செய்துவிட்டீர்கள். நன்றி.

//Software Engineer சொன்னது… சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.//
வந்து பாத்தேங்க. கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஜெகா: எங்க மச்சி ரொம்ப நாளா காணோம்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

தியா ரொம்ப அழகுடா செல்லம்..

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்வெல்லாம் சந்தோஷம் நிறைந்ததாக அமைய பிரார்த்தனைகளும்..

Chitra சொன்னது…

நான்: உங்க பேர் என்ன?
அவள் : தியானா (நீ தான பேர் வச்ச. அதயேன் திரும்பத் திரும்ப நீயே கேக்குற. யாராவது தெரியாதவங்க கேட்டா பரவால...)



...... Superb! சமத்து செல்லக் குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஸாதிகா சொன்னது…

தியானா அழகான பெயர்.தியானவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வாங்க சித்ராக்ஹா ஹா ஹா
நன்றி ஹா ஹா ஹா (சும்மா டமாஸ்).

ஸாதிகா. நன்றி. அப்புறம் அந்த பூசணிக்காயை சூட்கேஸ்ல வச்சிட்டிங்கல்ல!

வால்பையன் சொன்னது…

செல்லகுட்டிக்கு இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

நன்றி தல!

ponsiva சொன்னது…

nalla irruku sir..

unga ponnuku vazhthugal ..

VELU.G சொன்னது…

தியானாவுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

அழகான செல்லம்.இனிய மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்து தியானாக் குட்டிக்கு.

Unknown சொன்னது…

செல்லப்பெண் தியானா ,
தித்திக்கும் தேனாய் நீ - மழலை
யாழிசைக்கும் தேவதை நீ ..
(தா)னாக வந்துதித்த தாரகை - என்
தோழன் கைகளிலே கடவுள்
தவழ விட்ட காரிகையே !
வாழ்க பல்லாண்டு - எம்
தாய்த்தமிழ் போல...

சுப்பு சொன்னது…

தியானாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வாழ்த்திய அனைவருக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்.
தேவி உன்னைத் தவிர!

அன்பு
கலாநேசன்

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அருமைங்க.. :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தியானாவுடன் பேட்டி மிக அருமை. குட்டிச்செல்லத்துக்கு இந்த மாமாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Quote

Followers