ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

இருட்டில் வாழ்வதற்கா இந்தியராய் பிறந்தோம்

பரசுராம்
சத்ருகன்
அஜய் குமார்
அருண் குமார்
இந்த நால்வரும் பீகாரில் உள்ள போஜ்பூர் மாவட்டத்தின் வேறு வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவர்களுக்கு ஒரு சோகமான ஒற்றுமை, அண்மையில் இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் யாவருக்கும் பிறவிலேயே பார்வையில்லை. இதுபோல் கடந்த 3 மாதங்களில் இந்த மாவட்டத்தில் மட்டும் 20 குழந்தைகள் பிறந்துள்ளன.



இதற்கு பொதுவாக சொல்லப்படும் காரணம் என்னவென்றால் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரில் அளவுக்கு அதிகமாய் ஆர்சனிக் கலந்திருப்பதே.
உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள அறிக்கைப்படி 50 ppb (அதாவது ஒரு லிட்டர் குடிநீரில் ௦.00005g ) அளவுக்கு ஆர்சனிக் இருக்கலாம். அனால் போஜ்பூரில் உள்ள நீரில் 11861ppb ஆர்சனிக் கலந்துள்ளது. இதுபோல இன்னும் பீகாரின் 16 மாவட்டங்களில் ஆர்சனிக் அளவுக்கு அதிகமாக உள்ளதாக ஓராண்டு முன்னரே மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த குடிநீரை பருகினால் நுரையீரல், சிறுநீரக, தோல் மற்றும் கணைய புற்று நோய்கள் மற்றும் இன்ன பிற நோய்கள் வரும். இது முதல் தலைமுறைக்கு (அதாவது நீரை குடிப்பவர்களுக்கு). அனால் இந்த நீரை தாய் பருகியதால் குழந்தை குருடாய் பிறக்கும் (இரண்டாம் தலைமுறை பாதிப்பு) அளவுக்கு விட்டு விட்டோம்.

இந்த விபரீதத்தை நாம் உணருவது எப்போது?
இதற்கு நாம் செய்யபோவது  என்ன?

2 comments:

JEGANKUMARSP சொன்னது…

Nice blog buddy.... How is Soma and all? Convey my regards to Soma.

மரா சொன்னது…

enna seyya? india romba kevalama poyikittu irukku

Quote

Followers