அடுத்த வீட்டுப் பாட்டியிடம்
அவள் கணவன் பெயர்கேட்டால்
'ஏழுமலை' என்று சொல்லாமல்
வாரத்து நாட்களோட
மாலைக்கு கால் ஒடிச்சு
மனசுக்குள் சொல்லு ராசா
மன்னவரு பேர் கிடைக்கும்னு
ஏதோதோ புதிர் சொல்வாள்.
என்னவள் பெயர்
என்னவென்று கேட்டநண்பா
பாட்டியிடம் ஸ்டைல் வாங்கி
பால்நிலவின் பெயர் சொன்னேன்
படித்துப் பார்த்து
பதில் சொல் பார்ப்போம்.
கஜினி ராசா
பதினேழாம் முறை
படையெடுத்து வந்தப்போ
கொள்ளையடிச்ச கோவில்பேரில்
முதலிரண்டு லிபிஎடுத்து
கிலோ ஆட்டின்
இரு கொம்பொடித்தால்
கிடைக்கின்ற பெயரைச்சேர்
நான்விரும்பும் தேவதையின்
நாலெழுத்து பெயர்கிடைக்கும்.
(கண்டுபுடிங்க பார்க்கலாம் )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
-
►
2010
(47)
- ► செப்டம்பர் (5)
4 comments:
கடைசி இரண்டெழுத்து கலா ?
முதல் இரண்டெழுத்து சோம ?
சோமகலா?
பேரு வித்யாசமா இருக்கறதால குழப்பமா இருக்கு. ஆனா உங்க ப்ளாக் பேரும், உங்க பேரையும் பார்த்தா இதுதான்னு தோணுது.
இதுதான் விடைன்னா உங்களுக்கு ஒரு திட்டு இருக்கு. விடை சொல்லுங்க அப்பறமா சொல்றேன்.
அப்புறம்
இது முதல் பின்னூட்டம் போட்டவருக்கு..
எங்க பக்கமெல்லாம் வந்து கமெண்ட மாட்டீங்களோ?
உங்க மனம் கவர்ந்த தேவதை பற்றி கலாவுக்கு தெரியுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
1) பாலராஜன்கீதா
கை குடுங்க முதல்ல. கரெக்டா சொல்லிட்டிங்க.
2 ) பரிசல்
பதில் சரி தான்.
வரலாறு மிக முக்கியம் நண்பரே.
ஹி ஹி. திட்டுங்க.
3 )டோண்டு சார்
தெரியும்.
கருத்துரையிடுக