கிளி ஜோசியம், எலி ஜோசியம், பல்லி ஜோசியம், பாம்பு ஜோசியம் இன்னும் இன்னும் எத்தனையோ ஜோசியங்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புதிதாய் வந்திருப்பது பூச்சி ஜோசியம்.
உலகக் கால்பந்துத் திருவிழா கலைகட்டி இப்போது காலிறுதிச் சுற்றுகள் நடைபெறுகிறது. உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு விளையாட்டில் இப்படி ஒரு கேலிக் கூத்தா என எண்ண வைக்கிறது சமீபத்திய நிகழ்வுகள்.
நீங்கள் மேலே பார்க்கும் இந்த நீர்வாழ் எட்டுக்கால் பூச்சி ஆக்டோபஸ் வகையைச் சேர்ந்தது. இதன் பெயர் ஆரக்ல் (எ) பால். இங்கிலாந்தில் பிறந்த இந்த இரண்டு வயது பூச்சி தான் ஜெர்மனியில் இப்போது VIP . இது ஜெர்மனி விளையாடும் எல்லா போட்டிகளின் வெற்றி தோல்விகளையும் நாலு நாள் முன்னரே நச்சென்று சொல்லி விடுகிறதாம்.
எப்படின்னா, ஒரு தொட்டியில் இரண்டு கண்ணாடிக் கோப்பைகளை வைத்து இரண்டிலும் ஒவ்வொரு துண்டு மாமிசத்தை வைத்து மூடி விடுகிறார்கள். இரண்டு கண்ணாடிக் கோப்பைக்கு வெளியிலும் இரு நாட்டின் கொடியிருக்கும். பிறகந்த தொட்டிக்குள் ஆச்டோபசை விடும் போது அது எந்த தொட்டில் உள்ள மாமிசத்தை உண்கிறதோ அந்த நாடு ஜெயிக்கும். சிம்பிள்.
இதுவரை ஜெர்மனி விளையாண்ட நான்கு போட்டிகளின் முடிவையும் மிகச் சரியாய் சொல்லிவிட்டதிந்த பூச்சி. முதலிரண்டில் ஜெர்மனி ஜெயிக்கும் என்றது. ஜெயித்தது. மூன்றாவதில் செரிபியாவுடன் தோற்கும் என்றது. ஜெர்மனி தோற்றது. நான்காவதுப் போட்டியில் உடனே ஓடிப்போய் ஜெர்மானிக் குடுவையில் கரி தின்றதால் எளிதாய் இங்கிலாந்து தோற்றது, 4-1 என்ற கோல் கணக்கில். இந்த போட்டியில் நடுவர்களே பூச்சியின் பேச்சைத் தான் கேட்டார்கள் என்பது கூடுதல் சுவாரசியம்.
இன்று நடக்கும் அர்ஜென்டினாவுடனான காலிறுதிப் போட்டியிலும் ஜெர்மனியே ஜெயிக்குமாம். பூச்சி சொல்லிடுச்சி நாமெல்லாம் மேட்சே பார்க்க வேண்டாம். அதுவும் 45 நிமிடம் யோசித்துச் சொன்னதால் ஜெர்மன் வீரர்கள் கவலையாய் உள்ளனர். ஏனென்று கேட்டால், இங்கிலாந்துப் போட்டியின் முடிவை பூச்சி உடனே சொல்லிவிட்டதால் எளிதாய் வென்றார்கள். இப்போது 45 நிமிடம் யோசித்துச் சொன்னதால் மிகவும் போராடியே ஜெயிக்க வேண்டியிருக்குமாம்.
எனக்கு சில சந்தேகங்கள்
1) ஆக்டோபசுக்கு வயிறார உணவிட்டால் அது ஒரு துண்டு கறிக்காக ஓடி வருமா?
2) வெற்றி தோல்வியின்றி முடியும் போட்டிகளை எப்படிச் சொல்லும்? (இரண்டிலும் பாதி பாதி சப்பிடுமோ!)
3) இதை எல்லாம் விட முக்கியமாய், ஒற்றைப் பந்தின் பின்னால் ஒன்றரை மணி நேரம் ஓடி ஓடி வெற்றிக்காய் போராடும் வீரர்களிடம் நீ தோற்றுப் போவாய் என நாலு நாள் முன்னரே சொல்லுவது நியாயமா?
நல்லாத்தான் பூச்சி காட்றாங்கப்பா.
சனி, 3 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
22 comments:
இன்னொரு சூதாட்டம் ..
புலி ஜோசியம்,சிங்கம் ஜோசியம்,இது எல்லாம் ஏன் வரவில்லை? !!!!!!!!
//கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
இன்னொரு சூதாட்டம் ..//
மிகச் சரி.
//சௌந்தர் சொன்னது…
புலி ஜோசியம்,சிங்கம் ஜோசியம்,இது எல்லாம் ஏன் வரவில்லை? !!!!!!!!//
அதுக்கெல்லாம் சோறு போட ஜோசியக்கரர்களுக்கு முடியாது. அதானோ....
நல்லாத்தான் பூச்சி காட்றாங்கப்பா///
புரிந்தால் சரிங்க..
முதல் பாதியில் ஜெர்மனி மட்டுமே கோல் போட்டிருக்கு..
பூச்சி சொன்னது சரிதான் போலிருக்கே...
ஜெர்மனி 2 கோல்..
ஜெர்மனி 3 கோல்..
ஜெர்மனி 4 கோல்..
ஜெர்மனி ஜெயித்தது
// வெற்றி தோல்வியின்றி முடியும் போட்டிகளை எப்படிச் சொல்லும்? (இரண்டிலும் பாதி பாதி சப்பிடுமோ!)//
ஹா ஹா ஹா
சுவாரஸ்யம்...
நல்லாவே ஜோசியம் பாக்ராங்கப்பா... எல்லாம் சும்மா ஒன்னுமே இல்லை
இருக்கின்றது பற்றாது என்று இந்த ஜோசியம் வேறா?
//3 ஜூலை, 2010 9:33 am
சௌந்தர் சொன்னது…
புலி ஜோசியம்
,சிங்கம் ஜோசியம்,இது எல்லாம் ஏன் வரவில்லை!!!!
யோசிச்சிகிட்டு இருக்காங்களாம் அடுத்ததா எதை களத்தில் இறக்கலாமுன்னு..
நல்ல வேலை டைனோசர் இனம் அழிந்தது... இல்லாவிட்டால் அதையும் வைத்து.... வேடிக்கை காட்டி இருப்பானுங்க.....
மூட நம்பிக்கைகள் எல்லா நாட்டிலும் ஒன்றுபோல்தான் இருக்கிறது
அந்த பூச்சிக்கு கிரிக்கெட் எல்லாம் தெரியாதான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க தோழரே...
எப்படியோ காலிறுதியில்
ஜெர்மனி ஜெயிச்சிடுச்சே?
வந்து படித்த அனைவருக்கும் என் வணக்கங்கள்.
//அந்த பூச்சிக்கு கிரிக்கெட் எல்லாம் தெரியாதான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க தோழரே...//
அடுத்த IPLல ஆரமிச்சிடலாமா....
ஜெர்மனி vs ஸ்பெயின்
இந்த இரண்டாம் அரையிறுதிப் போட்டியில ஜெர்மனி தோத்துடும்னு பூச்சி சொன்னுச்சு.
போட்டி ரொம்ப கடுமையா இருந்தது . முதல் பாதியில் யாருமே கோல் போடல..
அப்புறம் கடைசியா ௦-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி ஜெயிக்கும் என்றும் நேற்றைய இறுதிப் போட்டியில் ஸ்பெயின் ஜெயிக்கும் என்றும் ஆக்டோபஸ் மிகச்சரியாக ஆருடம் சொல்லியது. அப்படியே நடந்தது. ஸ்பெயினுக்கு வாழ்த்துக்கள்.
10 கால் பூச்சியை சென்டிபீட் பூச்சியைக் கேட்டால்,இன்னும் துல்லியமாகக் கணித்திருக்கும்...
க்ரீன் கார்ட்,ரெட் கார்ட் யார் யார் வாங்குவார்கள் ,யார் யாருக்கு கால் பிசகும் யார் யாரை முட்டித் தள்ளி விடுவார்கள் வரை சொல்லியிருக்கும்
யாருங்க இந்த பூச்சிய கண்டுபிடிச்சது ? யாருக்கு இந்த பூச்சி சம்பாதிச்சு கொடுக்கிற காசு எல்லாம் ?
கருத்துரையிடுக