வியாழன், 23 செப்டம்பர், 2010

காமினி இருக்க பயமேன் (சவால் சிறுகதை)

காமினி ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். சிறு வயதிலிருந்தே பரத்-சுசீலா, வைஜெயந்தி-நரேன்,விவேக்-ரூபலா என படித்து வளர்ந்த ஆர்வத்தில் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தும் பரந்தாமனிடம் வேலைக்கு சேர்ந்தாள். அங்கு உடன் பணிபுரியும் தீபக்கும் இருக்கிறான், காமினி அவனைக் காதலிக்கிறாள் என்பதெல்லாம் நமக்கும் இந்தக் கதைக்கும் தேவை இல்லாத விஷயங்கள்.

வேறொரு கேஸ் விசயமாய் உளவு பார்க்கப் போன இடத்தில் இருவர் பேசிக்கொண்டதை மறைந்திருந்து கேட்டதின் மூலம் காமினிக்கு வைரத்தின் மேட்டர் தெரிய வந்தது. இதை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கையில் தலையில் அடி விழுந்தது. சுதாரித்து எழுந்து ஓடத் துவங்கினாள். இருவர் துரத்தும் காலடி ஓசை இன்னும் வேகமாய் ஓடத்தூண்டியது. 'தலையில் அடிபட்டும் ஓடுகிறாய்,உனக்கொண்ணும் ஆகல...கமான் காமினி' என தனக்குத் தானே தைரியம் சொல்லி அருகிலுள்ள மருத்துவமனையை அடைந்தாள்.

அடி ஒன்றும் பலமில்லை. சிறு வீக்கம் தான். வீஸிங் இருப்பதால் நெபுலைசர் கொடுத்திருக்கேன். ECG மானிட்டர் பண்ணனும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பலாம் என்று டாக்டர் சொன்னது எதுவுமே காமினி காதில் போட்டுக்கொள்ளவில்லை. மனது முழுதும் வைரத்தின் நினைப்பே ஆக்கிரமித்திருந்தது. எப்படியாவது வைரத்தை காப்பாற்ற வேண்டுமென முடிவெடுத்தாள்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு , வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.உடனே ஐந்தாவது மாடி, ஆறாவது மாடி என கற்பனை செய்யவேண்டாம். வாசல் வழி சென்றால் துரத்தி வந்தவர்கள் காத்திருக்கலாம் என்பதால் ஜன்னல் வழி வெளியேறினாள். பின் வாசல் வழி வெளியேறி அருகில் உள்ள சந்து வழியே மருத்துவமனைக்கு முன்புறம் வந்து நோட்டமிட்டாள். போலிஸ் ஜீப் ஒன்று நின்றிருந்தது. மெல்ல அதை நோக்கி நடந்தாள்.

ஜீப்பில் இருந்தது சிவா. காவல் துறையில் உள்ள ஒரு கறுப்பாடு. சில கேஸ் விசயங்களை அவனிடம் இருந்து கேட்டுப் பெற்றதால் அவனை நல்லவனென்றே நம்பிக்கொண்டிருக்கிறாள் காமினி. அவனிடம் வைரம் பற்றிய விவரங்களைச் சொல்லி உடன் வருமாறு அழைத்தாள். நானே உன்னை அங்கு கூட்டிப் போகத்தான் காத்திருக்கிறேன் என மனதில் நினைத்தபடி ஜீப்பை ஸ்டார்ட் செய்தான் சிவா.

இவர்கள் இருவரும் அந்த வீட்டினுள் நுழைந்ததும் அந்த இருவரும் தப்பியோட முயலாமல் அப்படியே நின்றனர். 'இந்தக் கடத்தல் அடிக்கடி நடக்குது என் உதவியோடத்தான்' என்று சிரித்தபடி சொன்ன சிவா தன் துப்பாக்கியை எடுத்தான். நீ வந்துட்டுப் போனதுமே எனக்கு தகவல் சொல்லிட்டாங்க. எப்படியும் நீ வருவேன்னு தான் ஹாஸ்பிட்டல் பக்கத்துலையே காத்திருந்தேன்.“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. சாரி சிவா, எனக்கு வேறவழி தெரியுது அதோபார் என வாசலைப் பார்த்து புன்னகைத்தாள் காமினி.

உன்னை பாக்கறத்துக்கு முன்னாடியே பரந்தாமன் சார் மூலமா நான் கமிஷ்னருக்கு தகவல் சொல்லிட்டேன். ஆனாலும் தாமதித்தால் இவர்கள் வைரத்தை ஏதேனும் செய்துவிடுவார்கள் என பயந்து தான் உன்னை துணைக்கு அழைத்தேன். ஆனாலும் உங்கள் மூணு பேருக்கு ஒரு வேன் அதிகம் தான் என்றாள்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
காமினி இருக்க பயமேன் என சொல்லி காலண்டர் முருகனாய் சிரித்தாள் காமினி.

இப்படி குழந்தைகளை கடத்தி, ஊனமாக்கி, பிச்சை எடுக்க வைக்கும் கும்பலுக்கு காவல் துறையை சேர்ந்த ஒருவரே உடந்தையாய் இருந்ததை சொல்ல நான் வெட்கப்படுகிறேன். இந்த நேரத்தில் துணிவுடன் செயல்பட்ட காமினிக்கு என் பாராட்டுக்களைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் கமிஷ்னர். ஆம். வைரம் ஓர் ஏழைச் சிறுவன். ஏழைகளுக்கு தங்கமும், வைரமும், முத்தும், பவளமும் பெயரில் மட்டும் தானே இருக்கும்.

33 comments:

R. Gopi சொன்னது…

காலண்டர் முர்கனாய் சிரிப்பது, கடைசியில் வைரம் எனபது பெயர் என்கிற ட்விஸ்ட் அருமை.

ஒரு சந்தேகம். காமினிக்கு எப்போது மாஸ்க் மாட்டப்படுகிறது?

என்னது நானு யாரா? சொன்னது…

கலாநேசன்! ஒரே மூச்சில கதையை சொல்லிட்டீங்க. என்ன செய்றது செருப்புக் கேத்த மாதிரி காலை வெட்ட வேண்டியது தான். வேற வழி இல்லை.

Unknown சொன்னது…

@Gopi Ramamoorthy: மாஸ்க்னா தீம் பார்க்ல விக்கற சிங்கம், புலி, spider man மாதிரி முகம் முழுவதும் மூடனும்னு இல்லைங்க. வீசிங்க்கு குடுக்குற நெபுலைசரும் மாஸ்க் தான். நன்றி.

Unknown சொன்னது…

என்னது நானு யாரா?: என் முதல் சிறுகதையை நாவலென்று பாராட்டிய பங்காளி வாழ்க.

Asiya Omar சொன்னது…

கதை நல்லாயிருக்கு.

ஸாதிகா சொன்னது…

அருமையான் கதை.வாழ்த்துக்கள்!

JEGANKUMARSP சொன்னது…

வாழ்த்துக்கள்!

GEETHA ACHAL சொன்னது…

வாழ்த்துகள்...சூப்பராக இருக்கு...

பின்னோக்கி சொன்னது…

சிறுவர்கள் கடத்தல் பற்றிய கதையும், அந்த மூன்று வாக்கியங்களும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

கடைசியில் எல்லாரும் ட்விஸ்ட் வைக்கிறீர்கள் :)

தவறாக எண்ண வேண்டாம். கதை சொன்ன விதம் இன்னும் மேம்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

Paleo God சொன்னது…

முதல் முயற்சி. நல்ல முயற்சி!! வாழ்த்துகள் நண்பரே.:)

thiyaa சொன்னது…

அருமையான கதை தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முதல் முயற்சி - நல்ல முயற்சி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வெங்கட்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அருமை!! வாழ்த்துக்கள் கலாநேசன்.

மதன்செந்தில் சொன்னது…

இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்..

www.narumugai.com

செல்வா சொன்னது…

//வைரம் ஓர் ஏழைச் சிறுவன். ஏழைகளுக்கு தங்கமும், வைரமும், முத்தும், பவளமும் பெயரில் மட்டும் தானே இருக்கும்.
//

அட கடசில கதைல இப்படி ஒரு திருப்பத்த கொண்டு வந்துட்டீங்க .. நல்லா இருக்கு ..
நான் இன்னும் எழுதல .. இனிமேல் தான் எழுதணும் ..!!

அருண் பிரசாத் சொன்னது…

இன்னும் சுவாரசியமாக்கி இருக்கலாம்...

கதை கரு அருமை..

அன்பரசன் சொன்னது…

கதை அருமை..

ஹேமா சொன்னது…

வெற்றிக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள் கலாநேசன்.

கதையில் சமூக அக்கறையும் கலந்து எழுதியிருப்பது நல்லாயிருக்கு.

vanathy சொன்னது…

கதை நல்லா இருக்கு.

thiyaa சொன்னது…

நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

பாரதசாரி சொன்னது…

பாராட்டுகுரிய முயற்சி.
இன்னும் கொஞ்சம் திருப்பங்கள் வெச்சி இன்னும் ஒண்ணு முயற்சி செய்யுங்க நண்பரே!!!

ஜெய்லானி சொன்னது…

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_21.html

Unknown சொன்னது…

ஒரு கவியரசர் கதாசிரியராய் இன்னுமொரு பரிமாணம் எடுத்திருப்பது பேருவகை அளிக்கிறது.
இந்தப் பரிமாணத்திலும் வியக்கத்தக்க பரிணாம வளர்ச்சியை அடைந்திட இந்தத் தோழியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

thiyaa சொன்னது…

அருமையாக இருக்கிறது ரசித்து படித்தேன்

Ramesh சொன்னது…

அருமையான கதை...வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

முதல் முயற்சி - நல்ல முயற்சி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அப்பாதுரை சொன்னது…

வாழ்த்துக்கள்.
இருப்பதிலேயே சுருக்கமான கதை உங்களது தான்னு நினைக்கிறேன்.

aru(su)vai-raj சொன்னது…

கதை நல்லா இருக்கு . வாழ்த்துகள்

Abhi சொன்னது…

நலலா எழுதியிருக்கீங்க! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Abhi சொன்னது…

நானும்எழுதியிருக்கேன் ... வைரம் உன் தேகம் ங்கற தலைப்பில்... http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

திருமதி ஜெயசீலன் சொன்னது…

கதை அருமை,
தயவு செய்து எழுத்து பிழையை தவிருங்கள்.
உளவு,உலவு இல்லீங்க

JEGANKUMARSP சொன்னது…

Congratulations Saravana... You have entered in to top 15 stories of this Sirukadhai potti... great! Keep it up.

www.shareblood.in சொன்னது…

அருமையான கதை...வாழ்த்துக்கள்

Blood Need or Donate Log on to
http://www.shareblood.in

Quote

Followers