சனி, 29 மே, 2010

காதலர் தினம்

அது ஒரு
ஆடிமாத புதன்கிழமை
பௌர்ணமி நாள்.

அன்று  தான்
நிலா என்னுடன்
உலா வருவதாய்
உறவு பேசியது.



இன்றுநான் புதிதாய் பிறந்தேன் - ஆம்
இன்றுதான் புதிதாய் பிறந்தேன்
காதலர் சொல்லும் கவிமொழியை
நானன்று வழி மொழிந்தேன்!

இதுவரை
காதலை நான்
காதலித்துக்கொண்டிருந்தேன்.
இன்று தான்
காதல் என்னை
காதலிப்பதாய்ச் சொல்லியது!

என்
அசைகின்ற ஓவியம்
அன்புமொழி பேசினாள்.
நானோ
தாய்மொழியிலும்
தடுமாறிப் பேசினேன்.

"வருங்கால மனைவியாக
நானுனக்கு
வருவதற்கு தகுதியுண்டா" என்றாள்.

இன்பக் கோவிலின்
இதய தெய்வத்தை
இமைக்காமல் பார்த்தேன் நான்.

யோசிக்க வேண்டுமா என்றாள்.
யோசிக்கவும் வேண்டுமா என்றேன்.

அதற்குப்பின் பேசியது
அனைத்துமே மௌனமொழி
விழியிட்ட வினாவிற்கு
விழியாலே விடை சொன்னோம்............

வெள்ளி, 21 மே, 2010

மனப்பெண்

கல்லூரிக் காலத்தில்
காதலிக்கும் யோகமில்லை
அலுவலகம் வந்தபின்
அமையுமென்றும் நினைக்கவில்லை!

உண்டு குடித்து உறங்கி
ஊர்சுற்றித் திரிந்தபோதும் 
கண்டுகொள்ளவேயில்லை என்னுள்
காதல் விதை உறங்கியதை!

உன்புன்னகை சிந்திய 
பொன்னொளி பட்டதும்
உறங்கிய விதையது
உயிர்பெற்றது விருட்சமாய்!

எப்படிச் சொல்வதென்று
எண்ணித் தவிக்கையில்
தேவதை நீயே
தித்திக்கும் வரம்தந்தாய்!

வாகனத்தில் உடனமர்ந்து
வருவதற்கே தயங்கியவள்
வாழ்க்கை முழுவதுமே
உடன்வர சமதித்தாய்!

நீயென் மூச்சுக்காற்றில்
ஊதிய பந்து
முதல்முதல் பாடிய
காவடிச் சிந்து!

மழைத்துளி தீண்டலில்
மணக்கின்ற பூமியாய்
மனதுக்குள் மலர்வெடிக்க
மகிழ்ந்தேன் நான்!

இன்று
மனப்பெண்ணே
என்னருகில்
மணப்பெண்ணாய்........

சனி, 15 மே, 2010

களர் நிலங்கள்

கடமையை செய்வதற்கு
காசு கேட்பவரும் - அடுத்தவர்
உடமையை கொய்வதிலே
உறுதியாய் நிற்பவரும்


பொறுப்புகள் மறந்துவிட்டு
போதையில் மிதப்பவரும்
உறுப்புகள் கொள்ளையிடும்
வெள்ளுடை சாத்தான்களும்


தீர்ப்புக்கு விலைபேசும்
வாய்ப்பேச்சு வீரர்களும்
கர்ப்பை காவுகேட்கும்
காவல்துறை சாமிகளும்


குறைத்துக்கொண்டே வாலாட்டும்
கூட்டத்தை வைத்துக்கொண்டு
அறிக்கைக்கு நடுவே
அரசியல் நடத்துவோரும்


எள்ளளவு கூடயிங்கு
எவருக்கு உதவதோர்
உள்ளம் இலாதோர்
உண்மையில் களர்நிலங்கள்.


இந்த கவிதை

இவருக்கு சமர்ப்பணம். (இல்ல இல்ல அன்பளிப்பு)


யாருன்னு தெரியலையா?


பெயர்: கேதான் தேசாய்
(நீங்க கேட்டான் தேசாய்னும் சொல்லலாம் அவ்வளவு வாங்கி இருக்காரு)


பதவி: இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் (முந்தாநேத்து வரை)


இப்போது: CBI கைதி


குற்றம்: மருத்துவ கல்லூரி அனுமதி வழங்க 2 கோடி வாங்கும் போது கையும் பையுமாய் மாட்டியது.


சமீபத்திய சாதனை: 1800 கோடி ரூபாயும் 1500 கிலோ தங்கமும் (வீட்டில் வைத்திருந்தது மட்டும்)


நீண்ட கால சாதனை:  ஒரு மருத்துவ கல்லூரிக்கு 15 கோடி வீதம் தன் பதவிக்காலம் முழுதும் வாங்கினாராம்.


உன் குத்தமா
என் குத்தமா
யாரை நான் குத்தம் சொல்ல?

வெள்ளி, 7 மே, 2010

ட்வீட்டரும் டெண்டுல்கரும்

 நிறைய எதிர்பார்ப்புகளுக்கு பிறகு கடந்த செவ்வாய் நள்ளிரவு சச்சின் டெண்டுல்கர் தமது குரும்பூ கணக்கை துவங்கினார். ஒரு மணி நேரத்தில் 75000 க்கு மேலான followers இணைந்தனர். (இந்த நேரத்தில் என் கணக்கை துவங்கிய அண்ணன் JPS க்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்).



எந்த விதமான பிரமாண்டமான அறிவிப்புகளுமின்றி இயல்பாய் துவங்கினார் SRT  " Finally the original SRT is on twitter n the first thing I'd  like to do is wish my colleagues the best in the Windies "

சில நம்பகமான தகவல்களும், புகைப்படங்களும் வெளியிட்டு தான் போலி அல்ல நிஜம் என நிரூபித்தார்.

ட்வீட்ட விரும்பும் நண்பர்களுக்கு இதோ SRT  ன் twitter   id
sachin_rt

ஞாயிறு, 2 மே, 2010

மனதின் வார்ப்பு

கல்லூரி வாழ்க்கைக்குள்
காலெடுத்து வைக்கும்வரை
நட்புக்கும் எனக்கும்
நாலாம் பொருத்தம்தான்.

வகுப்பு துவங்கியதும்
வாரம் சில சென்றபின்பு
வளாகத்தில் நிகழ்ந்ததுநம்
முதல் சந்திப்பு.

மனதில் குழப்பத்துடன்
சரிஎது தவறெதுவென
சரிவரத் தெரியாமல்
மாணவர்க் கூட்டத்தில்
தனிமையில் நான் வாட
துணைக்கரம் நீட்டிய
தோழி நீ.

காணாமல் போனஎனை
கண்டெடுத்துத் தந்தவள் நீ.
எனக்கு எதெல்லாம்
நன்றாக வருமென்று
நீ சொல்லித்தான்
எனக்கேத்  தெரியவரும்.

வகுப்பறைக்குள் அமர்ந்து
வாதிட்ட நிமிடங்களும்
நடந்து பேசி சிரித்த
நல்ல நினைவுகளும்
என்னுள் நிலைத்திருக்கும்
நானுள்ள வரையில்...

வெள்ளைத் தாளாய்
இருண்ட என் மனதில்
கள்ளி நீதான்
கவிதை எழுதினாய்.

செதுக்குவதாய் நினைத்து
சிலசமயம் நீஎன்னை
சிதைத்தும் இருக்கிறாய் - நாம்
மணிக்கணக்கில் பெசியதுமுண்டு
மாதக்கணக்கில் பேசாமலிருந்ததும் உண்டு
ஆனாலும்
நட்பென்ற  சொல்லை
யார் சொன்னாலும்
உன்முகம் எனது
உள்மனதிரையில்
ஒளிர்கிறதே........

மனதின் வார்ப்பாய்.

Quote

Followers