நீ எனக்கு?
ஐயிரண்டு மாதங்கள்
அவள் கருவின்
பையிருந்து வந்ததனால்
அம்மா.
பசியின்றி வளரவைத்து
படிக்கவைத்து ஆளாக்கி
பார்த்துப் பார்த்து வளர்த்ததினால்
அப்பா.
ஓராண்டு கழித்துவந்து
ஒன்றாக உண்டுறங்கி
சண்டையிட்டு மகிழ்ந்ததினால்
சகோதரன்.
ஆனால்
என்ன வேண்டும் நீ எனக்கு?
பள்ளிசெல்லும் வயதில்
என் மனக்குளத்தில்
நீ எறிந்த கல்
இன்னும் குமிழிகளை
விட்டுக் கொண்டேயிருக்கிறது
கவிதைகளாய்....
உன்னிடம் தான்
கருப்பு வைரமாய்
கனலும் எண்ணங்களை
வெண்முத்துக் கவிதைகளாய்
வெளியிடக் கற்றேன்.
நீதான்
வகுப்புக்குள் எனக்கோர்
வாசகர் பேரவை
வாங்கித் தந்தாய்.
நான்
கவிதை எழுதக்
காரணமாயிருக்கும்
முக்கிய மூவரில்
நீங்களும் ஒருவர்.
என்னதான் நான்
சுயமாய் எழுதினாலும்
ஏதோ ஓர்வரியில்
நீவந்து சிரிக்கிறாய்.
அதனால்தான் - இன்று
வாழ்த்துச் சொல்வதற்கு
வாசகனைத் தாண்டியதொரு
நெருக்கமிருக்கிறது எனக்கு.
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
குரு துரோணர்
கிராமத்தில் வாழும்
உங்கள் ஏகலைவன்
கலாநேசன்.
17 comments:
கவியுடன் எப்போதும் நின்ன கவி அருமை.........
அவர் பாடல் வரிகள் எனக்கு புடிக்கும். கவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.....
உன்னிடம் தான்
கருப்பு வைரமாய்
கனலும் எண்ணங்களை
வெண்முத்துக் கவிதைகளாய்
வெளியிடக் கற்றேன்.
வாழ்த்துகள் இருவருக்கும்..
நல்லா இருந்தது உங்கள் உங்கள் வாழ்த்து கவிதை வாழ்த்துக்கள்
அருமையாக உள்ளது நண்பரே,வாழ்த்துகள்.
குரு தட்சணையாக துரோணருக்கு என்ன தருவீர்கள்?
வில்லம்புக்குக் கட்டை விரல்
சொற்கணைகளுக்கு????
கற்பனா சக்திதான் கட்டைவிரல்.
கவிதை அருமை....
//குரு தட்சணையாக துரோணருக்கு என்ன தருவீர்கள்?
வில்லம்புக்குக் கட்டை விரல்
சொற்கணைகளுக்கு????
கற்பனா சக்திதான் கட்டைவிரல்.//
ஆறாம் விரலைத் தருவேன்(பேனா). நல்லதாய் நான்கு கவிஎழுதி...
குரு, சௌந்தர், புன்னகை தேசம், வசந்த், இளம் தூயவன், கோமா உங்கள் வருகைக்கு நன்றி.
என்னதான் நான்
சுயமாய் எழுதினாலும்
ஏதோ ஓர்வரியில்
நீவந்து சிரிக்கிறாய்.
எனக்கும் இந்த வரிகள் ஒத்துபோகும் நேசன் அண்ணா...ரசித்தேன்...கவிப்பெரரசுக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்...
அழகான வரிகள்
வாழ்க வளமுடன்
நெல்லை நடேசன்
துபாய்
அமீரகம்
வாழ்த்துக்கவிதை அருமை.
வைரமுத்துவின் ஆளுமை.. ஆதரிப்போரும்.. எதிர்ப்போரும் ரசிக்கும் ஒன்று..
அவருக்கு வாழ்த்தும்... உங்களுக்கு பாராட்டும்...
மிக அழகான சொல்லாடல்..!
நல்ல கவிதை வார்தைகள் அருமை.
வாழ்த்துக்கள் உங்களுக்கும் வைரமுத்து சாருக்கும்..
கவிக்குக் கவி வாழ்த்து.இன்னும் நிறையவே பேரும் புகழும் வாழ்த்துமாய வாழ இறைவன் ஆசிகள் கிடைக்கட்டும்.
அழகாய் ஒரு நன்றி..
கருத்துரையிடுக