செவ்வாய், 6 ஜூலை, 2010

சொல்வரந்தருவாய்...

என்னுயிர்த் தோழியின் திருமணத்திற்காய் தில்லியில் இருந்து திருச்சி சென்ற என்னால் அவள் திருமணத்திற்குச் செல்ல இயலவில்லை. அதனால் கோபம் கொண்ட அந்த குழந்தை மனதுக்காரி ஒன்றரை வருடமாய் என்னோடு பேசுவதில்லை. அவளுக்காய் ஓர் கவிதை...

நட்புக்கு உயிர்தந்த
என்னுயிர்த் தோழிக்கு
நல்மண வாழ்த்துக்கள்.

வரவில்லை நாங்களென
வருந்தாதே - நீயுன்
கண்நிறைந்த காதலரைக்
கைப்பிடிக்கும் தருணம்காண
காத்திருந்தேன்.

முதன்முதலாய்
தியானா பங்குபெறும்
திருமணம் இதுவென்றே
நானும் நினைத்திருந்தேன்
நடைமேடைக் கனவுகண்டேன்.

இடையில் காலத்தால்
தடைவந்து தாக்கியதும் - என்
பாதிஉயிர் மகளைப்
பார்த்துக் கொண்டதையும்
மீதிஉயிர் ஓடிவந்துன்
மெட்டிஒலி கேட்டதையும்
உணர்ந்தாயா நீ?

சரி சரி.
விளக்கங்கள் மட்டும் சொல்ல- இது
விடுமுறைக் கடிதம் அல்ல.

சுயநலக்காரனெனக்கு
சொல்வரம் நல்காய் - அறிவுச்
சுடர்மிகு எந்தேவி.

பதினெட்டு மாதங்களாய்
பதிலேதும் பேசாமல் - நீ
வாய்ப்பூட்டு போட்டு
வைத்திருக்கும் கைப்பேசி
மௌனத்தவம் கலைத்து
மனதோடு பேச
வாய்ப்பூட்டு.

தோழியே மீண்டும் நீ
தொடர்பு எல்லைக்குள் வா!

என்
உளறல்களைக் கவிதைகளாய்
மொழிபெயர்த்தச் செவிகளுக்காய்
காத்திருக்கின்றன நான்
வாங்கிவைத்த தோடுகளும்
வார்த்தைப் பூக்களும்......

24 comments:

http://rkguru.blogspot.com/ சொன்னது…

கவிதை அருமை...

Chitra சொன்னது…

சரி சரி.
விளக்கங்கள் மட்டும் சொல்ல- இது
விடுமுறைக் கடிதம் அல்ல.


..... தோழி, சீக்கிரம் புரிந்து கொண்டு பேச, வாழ்த்துக்கள்! அருமையான கவிதைங்க...

அருண் பிரசாத் சொன்னது…

அருமையான கவிதைங்க, உங்கள் சிநேகிதி விரைவில் உங்களை புரிந்து, தொடர்பு கொள்வார்

goma சொன்னது…

தோழியின் கோபம் குறைந்ததா??
என் பதிவிற்கு நீங்கள் அனுப்பிய பின்னூட்டம் ஏதோ காரணத்தால் பின்னூட்ட பெட்டிக்குள் நுழைய வில்லை[சம் டெக் ப்ரொப்ளம்]

காத்திருக்கிறேன்.6 பின்னூட்டங்கள் க்யூவில் காத்திருக்கின்றன

Unknown சொன்னது…

//என் பதிவிற்கு நீங்கள் அனுப்பிய பின்னூட்டம் ஏதோ காரணத்தால் பின்னூட்ட பெட்டிக்குள் நுழைய வில்லை[சம் டெக் ப்ரொப்ளம்]//

அட ஆமாங்க. பிளாகர்ல வலைப்பூ வைத்திருக்கும் எல்லோருக்கும் இன்று காலையில் இருந்து இப்படிதான். இப்போ சரியாயிடுச்சு.

நிலாமதி சொன்னது…

அழகாய் இருக்கிறது .மனந் திறந்த மடல் கவிதை வடிவில், நல்ல கவி வளம் இருக்கிறது .
தொடர்ந்து எழுதி ஜாமாயுங்கள் . நட்புடன் சகோதரி நிலாமதி

சீமான்கனி சொன்னது…

//இடையில் காலத்தால்
தடைவந்து தாக்கியதும் - என்
பாதிஉயிர் மகளைப்
பார்த்துக் கொண்டதையும்
மீதிஉயிர் ஓடிவந்துன்
மெட்டிஒலி கேட்டதையும்
உணர்ந்தாயா நீ?//

//என்
உளறல்களைக் கவிதைகளாய்
மொழிபெயர்த்தச் செவிகளுக்காய்
காத்திருக்கின்றன நான்
வாங்கிவைத்த தோடுகளும்
வார்த்தைப் பூக்களும்......//

ரசித்த வரிகள் ஒரு அன்பு மடலை சுருங்க கவிதையாய் தந்து சிலிர்க்க விட்டீர்கள் ..வாழ்த்துகள்...

தூயவனின் அடிமை சொன்னது…

கவிதை ரொம்ப அருமையாக உள்ளது. நீங்கள் செதிக்கி உள்ள வார்த்தைகள் உங்கள் தோழியின் செவிகளை நிச்சயம் சென்று அடையும், இந்த கருத்துரையை நீங்கள் படிபதற்கும், உங்கள் கை பேசி (தோழியிடம் இருந்து) அழைபதற்கும் சரியாக இருக்கும்.

ஹேமா சொன்னது…

இந்தக் கவிதையைப் பாத்திட்டுக் கை குடுத்திடுவாங்க.பாருங்களேன் !

ஸாதிகா சொன்னது…

இக்கவிதை படித்தாவது தோழி பழைய படி நட்புறவாட வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

மன்னிக்கணும் தம்பி ( இப்ப சரியா கூப்பிடுறேன்னு நெனைக்கிறேன்) இப்பதான் உங்க கவிதை படித்தேன்.. உண்மையான உணர்வுகளை கொட்டிய கவிதை.. உயிராய் மிளிர்கிறது.. அற்புதமான நட்பு..

இடைப்பட்ட காலத்தில் இன்னும் இறுகிப் போயிருக்கும்.. பொறாமைப்பட வைக்கும் நட்பு.. வாழ்த்துக்கள்

Admin சொன்னது…

நல்ல கவிதை. இரசித்தேன்

மங்குனி அமைச்சர் சொன்னது…

இவரை தோழனாய்
பெற
நீ
கொடுத்து வைத்திருக்க வேண்டும்
தோழியே

sakthi சொன்னது…

தோழியே மீண்டும் நீ
தொடர்பு எல்லைக்குள் வா!

மீண்டும் வரட்டும்
மீண்டு வரட்டும்

ரசித்தேன் உங்கள் கவிதை கண்டு

வித்தியாசமான ஆக்கம்

Karthick Chidambaram சொன்னது…

//தோழியே மீண்டும் நீ
தொடர்பு எல்லைக்குள் வா!//

கவலைய விடுங்க ! வந்துருவாங்க

அன்பரசன் சொன்னது…

கவிதை கலக்கல் ரகம்.

bogan சொன்னது…

எந்தச் சொல் பட்டு உடைந்தது உங்கள் நட்புக் கண்ணாடி?

அத்திரி சொன்னது…

நல்லா இருக்கு

ரிஷபன் சொன்னது…

ம்ம்.. நட்”பூ” மீண்டும் மலரட்டும்..

அன்புடன் நான் சொன்னது…

உங்க தோழிக்கு எனது வாழ்த்துக்கள்.

உங்க தோழி சீக்கிரமே தொடர்பு எல்லைக்குள் வருவார்கள்.
//பதினெட்டு மாதங்களாய்
பதிலேதும் பேசாமல் - நீ
வாய்ப்பூட்டு போட்டு
வைத்திருக்கும் கைப்பேசி
மௌனத்தவம் கலைத்து
மனதோடு பேச
வாய்ப்பூட்டு.//
மிக அழகிய வரிகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

//தோழியே மீண்டும் நீ
தொடர்பு எல்லைக்குள் வா!//


இக்கவிதை படித்தாவது தோழி பழைய படி நட்புறவாட வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

நட்புக்கு வாழ்த்து சொன்ன நல்லா உள்ளங்களுக்கென் நன்றிகள்

அண்ணாமலை..!! சொன்னது…

நண்பரே! உங்களிடம்..
தமிழ்...
அழகு...!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வார்த்தைப் பூக்களும்......
தொடர்பு எல்லைக்குள் !//
.வாழ்த்துகள்..

Quote

Followers