வணக்கம். அவியல், குவியல், கொத்துபரோட்டா போன்ற எண்ணச் சிதரல்களுக்கான குறிசொல் வரிசையில் இதோ என்னுடையது கூட்டாஞ்சோறு (சின்ன புள்ளத் தனமா இருக்கோ?). நிறைய பதங்களை யோசித்துப் பார்த்தபின் இதுவே எனக்குப் பிடித்திருக்கிறது. வேறேதும் உங்களுக்குத் தோன்றினால் பகிருங்கள். பரிசளிப்பேன். இல்லை இல்லை பரீசலிப்பேன். (நாங்கல்லாம் இலவசமா கொடுப்பதையே காசு கொடுத்து வாங்கற ஆளு, என்கிட்டே இருந்து பரிசா?). சரி சரி, பொங்கலாமா....
1 . ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே....(ஆட்டோகிராப் ), ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன் (பாய்ஸ்) இந்த பாடல் வரிகளில் இலக்கணப் பிழை இருப்பதாக எனக்குள் இருக்கும் நக்கீரன் சொல்றாரு. அது 'ஒவ்வொரு பூவுமே, ஒவ்வொரு பல்லிலும்' ன்னு தானே இருக்கணும். பின்ன ஏன் அப்படி எழுதினார்கள். யாராவாது விளக்குங்கள். (மேல 'நாங்கல்லாம்' னு இருக்கறது நானெல்லாம்னு தானே இருக்கணும். தன் தவறைத் தானே கண்டறிந்த தானைத் தலைவன் ...........)
2. கடந்த பதினேழாம் தேதி, டில்லியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரு செல்போனை சுட்டுட்டாங்க. (ஒண்ணு தானா??). சுட்டவனுக்குத் தெரியாது, சிறப்புப் பாதுகாப்புப் படையில் இருந்து அத சீகிரமாக் கண்டுபிடிச்சி வீட்டுக்கே வருவாகன்னு..! ஏன்னா அந்த செல்போனுக்குச் சொந்தக்காரர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் (வருங்காலப் பிரதமர்?) ராகுல் காந்தி. ஞாயிற்றுக் கிழமை போனை பறிமுதல் செய்து ராகுலிடம் ஒப்படைத்தனர், கேஸே போடாமல்..
3. எந்த ஒரு கலந்துரையாடலின் போதும் மற்றவர் கருத்துக்கு மதிப்பு கொடுத்து கேளுங்கள். பின் யோசித்து முடிவெடுங்கள். எந்த விசயத்தையும் ஒரே கோணத்தில் பார்ப்பது சரியல்ல. கீழே உள்ளது தவளை என நாம் வாதிடலாம். அதுவே வேறோர் கோணத்தில் (உண்மையில்) குதிரையாகக் கூட இருக்கக் கூடும்.
ரோட்டேட்டு.....
இன்னும் பொங்குவோம்...........
புதன், 30 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
-
▼
2010
(47)
- ► செப்டம்பர் (5)
14 comments:
கூட்டாச்சோறூ நிலவொளியில் சாப்பிட்ட எபக்ட். வாழ்த்துக்கள்
//அது 'ஒவ்வொரு பூவுமே, ஒவ்வொரு பல்லிலும்' ன்னு தானே இருக்கணும். பின்ன ஏன் அப்படி எழுதினார்கள். யாராவாது விளக்குங்கள்//
என்னே ஒரு ஆராய்ச்சி.......நடக்கட்டும்
அந்த பாட்டு தப்புதான்.. போட்டோ அருமை..
உங்கள் கூட்டாஞ்சோறு - அறுசுவையுடன் ருசியாக இருக்கிறது.... :-)
சபாஷ்
பெயருக்கு ஏற்றபடி இருக்கிறது விஷயம்... படம் அருமை
பொங்கிய சோறு குணம்,மணம் காரத்துடன் கமகம..தொடருங்கள்.
//இந்த பாடல் வரிகளில் இலக்கணப் பிழை இருப்பதாக எனக்குள் இருக்கும் நக்கீரன் சொல்றாரு. //
ஆயிரம் நிலவே வா! என்று இருக்கு, ஆனா ஆயிரம் நிலாக்களே வான்னு தான் இருக்கனும்!
இதுவும் இலக்கண பிழை தான்
இது விஜய் சொன்னது தான்!
படத்தோட மெசேஜ் சூப்பர்ப்,,,
ம்ம்ம்...கூட்டாஞ்சோறு மிகவும் அருமையான தமிழ்ப்பெயர்.நல்லதெரிவு கலாநேசன்.
உண்மைதான் பார்ப்பவர்களின் கண்ணோட்டம்தான் தீர்மானிக்கிறது எதையும்.
வாழ்த்துக்கள்...கூட்டாஞ்சோறு மிகவும் அருமையான தமிழ்ப்பெயர்..
போட்டோ அருமை..
கூட்டாஞ்சோறு மனம் பிரமாதம்
பாராட்டுக்கள் கலாநேசன்....
அதானே..நக்கீரர் சொல்றது சரியே. ராகுல் காந்தி செல் ஃபோன் என்னத்தை சொல்ல...
அண்ணா கலக்கிட்டிங்க அடுபில்லாமலே கூட்டாஞ்சோறு
அருமையான ருசி............
கருத்துரையிடுக