ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

கனவு

வானவில் தானெடுத்து 
வளையல்கள்  செய்தலின்று
வழக்கமாகியது எனக்கு!

மனதே உன்னுடன் நான் 
மகிழ்ச்சியாய் குடித்தனம் 
மணல்வீட்டில் நடத்துகிறேன்!

காண்கின்ற காட்சியெல்லாம் 
கண்ணே உன் முகம்காட்டி 
களிப்புறச் செய்யுதடி!

எழுதலாம் என்று 
எடுக்கின்ற தாளிலெல்லாம் 
உன்பெயர் மட்டுமெழுதி
உலகையே மறக்கின்றேன்!

இவையெல்லாம் இங்கு
இனிதே நடக்கிறது 
எவரும் வந்து
என்னை எழுப்பாதவரை.....

(1999)

16 comments:

அன்புடன் நான் சொன்னது…

கனவு மிக எளிமை.... அருமை.

thendralsaravanan சொன்னது…

இனிதான கனவு!

'பரிவை' சே.குமார் சொன்னது…

கனவு அருமை.

எல் கே சொன்னது…

நல்ல கனவு

தினேஷ்குமார் சொன்னது…

super very nice...

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

Superb :)

G.M Balasubramaniam சொன்னது…

உறங்கினாய், கனாக்கண்டாய், உலகம் இன்ப சாகரமமாய் இருந்தது. விழித்தாய் எழுந்தாய் வாழ்வு கடமைக் கடலாக் மாறியது.

r.v.saravanan சொன்னது…

கனவு அருமை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கனவு நல்லா இருக்கு நண்பரே.

தூயவனின் அடிமை சொன்னது…

கனவு கனவாகவே இருக்கட்டும்.

செல்வா சொன்னது…

/எழுதலாம் என்று
எடுக்கின்ற தாளிலெல்லாம்
உன்பெயர் மட்டுமெழுதி
உலகையே மறக்கின்றேன்!
//

இது நல்லா இருக்கு அண்ணா .. அப்புறம் என்ன ஆச்சு ? ஹி ஹி

ADHI VENKAT சொன்னது…

நல்ல கனவு.

Unknown சொன்னது…

@ சி.கருணாகரசு சொன்னது…
@ thendralsaravanan சொன்னது…
@ சே.குமார் சொன்னது
@ எல் கே சொன்னது… …
@ தினேஷ்குமார் சொன்னது…
@ கனாக்காதலன் சொன்னது…

அனைவருக்கும் நன்றி!

Unknown சொன்னது…

@ G.M Balasubramaniam :ஆமாம் அய்யா, நன்றி.

@ r.v.saravanan : நன்றி

@ வெங்கட் நாகராஜ் : நன்றி

@ இளம் தூயவன் : இல்லீங்களே...அது நனவானது.

Unknown சொன்னது…

@ கோமாளி செல்வா :அப்புறம் அந்தக் கனவு பலித்தது.

@ கோவை2தில்லி : நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

பத்து வருஷத்துக்கு முன்னாடியா ..:)) அப்ப ஓகே..:))

Quote

Followers