ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நீந்துதல் மீன்களின் குற்றமா? #tnfisherman

உடன்பிறந் தவர்களைப் போலே- இவ் 
வுலகினில்  மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?
என்ற  பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. வெறும் வலையோடு வயிற்றுப் பிழைப்புக்காய் கடலுக்குள் சென்றவனை ஆயுதம் எய்துக் கொல்வது நியாயமா? நீந்துதல் என்பது மீன் செய்யும் குற்றமா? மீன்பிடிக்கச் செல்வது மீனவன் செய்யும் குற்றமா?

"இந்திய மீனவர்களை மனிதர்களாக நடத்த ஆவன செய்வோம். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலோர ரோந்து, பன்னாட்டுக் கடல் எல்லைகளில் ரோந்து, வான் வழி மற்றும் ரேடார் கண்காணிப்புகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன" - இது நாமெல்லாம் குரல் கொடுத்ததால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லைங்க. 2007 ஆம் வருஷம் மே மாதம் ஒன்பதாம் தேதி அந்நாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில், 1991 முதல் 2007  ஏப்ரல் வரை 77 இந்திய மீனவர்களை இலங்கை ராணுவன் சுட்டுக் கொன்றுள்ளதேன்னு கேட்டதற்குப் பதிலாய்ச் சொன்னது.

இன்றைய நிலவரப்படி 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொலை  செய்யப்பட்டபின்னும் ராஜபக்சே சொல்கிறார், "இலங்கை ராணுவத்தினர் ஒன்றுமரியாதவர்கள் என்று!". கடந்த இரு தினங்களாக இணையத்தில் எழுப்பப்படும் குரல்கள் நிச்சயம் பயனளிக்கும். ஒன்றுகூடிக் குரல் கொடுப்போம்.

இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman 
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form


என்னுடைய (@kalanesan) ட்விட்டர் தளத்தில் பதிந்ததில் சில...

 1
தந்தி மட்டும் அனுப்பினால் போதுமா?
தந்திடுவானா எமன், தான் எடுத்த உயிர்களை...
 2
தமிழன் வயிற்றுப் பிழைப்புக்காய் வீசினான் வலை -அதுவே
சிங்கள நரிகள் அவனுக்கு விரிக்கும் சிலந்தியின் வலை.
 3
சிங்கள கடற்படையின் துப்பாக்கிப் பயிற்சிக்கு
தமிழக மீனவன் உயிருள்ள பொம்மையா?
4
கடலில் சிந்திய ரத்தமெல்லாம் -மீனவர்
உடலின் இந்திய ரத்தம்.
5
படகும் கப்பலும் மிதந்த கடல்
இன்று மிதப்பதோ மீனவர் உடல்.
6
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில்
ஒற்றுமை நீங்கினால் அனைவர்க்கும் தாழ்வே!
7
"பொறுத்தது போதும்! பொங்கி எழு!" இது யார் எழுதிய வசனம் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?
8
இலங்கைத் தமிழனை இன்னலில் தவிக்கவிட்டோம் காரணம் இறையாண்மை. இந்தியத் தமிழனை காக்க மறந்தால் அது நம் இயலாமை. 

சுமார் இரண்டு மணி நேரத்தில்  600 க்கும் அதிகமான ட்விட்டுகள் பதிவாகியுள்ளன. உங்கள் எல்லாக் கருத்துக்கள் கண்டனங்களோடும்  #tnfisherman என்று இணைக்கவும். ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம். நிச்சயம் நல்லது நடக்குமென நம்புவோம்.
உடன்பிறந் தார்களைப் போலே- இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில் -இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்.
                                                     பாரதி.




21 comments:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நம் தமிழனுக்காக குரல் கொடுப்போம்...
ஒன்று படுவோம்... வெற்றி பெறுவோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம்

Thekkikattan|தெகா சொன்னது…

Thanks for your time and effort! keep it going...

தறுதலை சொன்னது…

சிங்கள நாட்டுப் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். சிங்கள நாட்டுடன் வணிகத் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டிய பொருட்கள் / நிறுவணிங்களின் பெயர்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்க வேண்டும்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் - நு நம்பித்தான் இப்படி நாசமா போயி நிக்கிறோம்.


---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -ஜன'2011)

raji சொன்னது…

கரம் கோர்ப்போம்- நம்
கடல் தமிழனை காப்போம்

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

ஓங்கி ஒலிக்கட்டும் நம் குரல்கள் !

உயிரோடை சொன்னது…

கண்டிக்க பட வேண்டிய செயலே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிங்கள கடற்படையிடம் நாள்தோறும் நாயடி பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒன்றுபடுவோம் நண்பர்களே. ஓங்கி ஒலிக்கட்டும் குரல்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமை அருமை.....

G.M Balasubramaniam சொன்னது…

I COULD NOT SEND THE ONLINE PETITION AS IT APPEARS TO HAVE ENCOUNTERED SOME ERROR. ANYWAY MY SYMPATHIES LIE WITH THE UNFORTUNATES, AND I PRAY FOR A SPEEDY SOLUTION.

ADHI VENKAT சொன்னது…

எல்லோரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

பொதுநல நோக்கம் கொண்ட இந்த நல்ல முயற்சி , தட்ட வேண்டியவர்களின் மனச்சாட்சியைத் தட்டப் பயன்படட்டும்

ஹேமா சொன்னது…

இந்த விஷயத்தில் நிறைவான ஒற்றுமை காண்கிறேன்.அதுவே சந்தோஷம்.வெற்றி !

Philosophy Prabhakaran சொன்னது…

உங்கள் ஆதரவை தெரிவித்ததற்கு நன்றி நண்பா...

Unknown சொன்னது…

கண்டிப்பாக போராடுவோம்! மீனவர்களை காப்போம்.

G.M Balasubramaniam சொன்னது…

Ihave signed the online petition. My signature no. is 4893.

Thenammai Lakshmanan சொன்னது…

ஒன்று பட்டுக் குரல் கொடுப்போம்..

பெயரில்லா சொன்னது…

I do not even know how I ended up here, but I thought this post
was great. I do not know who you are but certainly you are going to
a famous blogger if you are not already ;) Cheers!
Also visit my web site ; direct download movies

பெயரில்லா சொன்னது…

Oh my goodness! Awesome article dude! Many thanks,
However I am going through issues with your RSS.

I don't understand why I cannot join it. Is there anybody else getting the same RSS problems? Anybody who knows the solution can you kindly respond? Thanx!!
Here is my site ... make money online fast

பெயரில்லா சொன்னது…

This website was... how do I say it? Relevant!! Finally I've found something that helped me. Thanks a lot!
Have a look at my blog ; acne overnight

பெயரில்லா சொன்னது…

This design is wicked! You most certainly know how to
keep a reader amused. Between your wit and your videos,
I was almost moved to start my own blog (well, almost.

..HaHa!) Fantastic job. I really enjoyed what you had
to say, and more than that, how you presented it.
Too cool!
My weblog :: diablo 3 power leveling

Quote

Followers