வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

பின்னூட்டம்

பிறக்கின்ற குழந்தைக்கு 
பெண்ஊட்டும்  தாய்ப்பால்போல் 
பதிவுலகில் இடுகைக்கு 
பின்னூட்டம் அவசியம்.

தட்டத் தட்டத்தான் 
தங்கம் நகையாகும் - நீங்கள் 
சுட்டச் சுட்டத்தான் 
சொற்குவியல் கவியாகும்.


எந்தவொரு இடுகையிலும் 
நிறையோ குறையோ 
ஏதேனும் ஒன்றிருக்கும்.
வந்ததற்கு அடையாளமாய் - அதை 
வழங்கிவிட்டுச் செல்லுங்கள்.


படிக்கின்றப் பதிவுகளில் 
கருத்துப் பிழையிருப்பின் 
திட்டிச் சொல்லுங்கள் 
கரும்பாய் இனித்திருப்பின் - முதுகில் 
தட்டிச் செல்லுங்கள். 


"பெயரில்லாப்" பெரியவர்களே 
முகமூடி அணிந்துகொண்டு 
முதுகில் குத்தாதீர்.
பெயரைக்கூடச் சொல்லாமல் 
பெரிதாய் வேறென்ன 
சொல்லிவிடப் போகிறீர்கள்.
நேருக்கு நேர்வந்து 
நிறைய பேசுங்கள்.

தொடர்ந்து எழுத 
தெம்பு கொடுங்கள்  - ஆனால் 
தனிமனித தாக்குதலுக்கு 
கொம்பு சீவாதீர்.

பிறக்கின்ற குழந்தைக்கு 
பெண்ஊட்டும்  தாய்ப்பால்போல் 
பதிவுலகில் இடுகைக்கு 
பின்னூட்டம் அவசியம்.

டிஸ்கி: நான் ஒரு தடவை போஸ்ட் பண்ணிட்டா அப்புறம் நான் எழுதனத நானே படிக்க மாட்டேன். நீங்களாவது படிச்சு பின்னூட்டம் போடுங்க...











50 comments:

ஜானகிராமன் சொன்னது…

நல்லாயிருக்குங்க. அதே போல, ஒரே டெம்ப்ளேட்டா, "ரைட்டு" "கலக்கல்" "ரிப்பீட்டேய்" ன்னு விதவிதமான ஒரே கமெண்டை காப்பி பேஸ்ட் செய்யும் பின்னுட்ட வித்தகர்கள் பத்தியும் சொல்லியிருக்கலாம்.

ப.கந்தசாமி சொன்னது…

//"பெயரில்லாப்" பெரியவர்களே
முகமூடி அணிந்துகொண்டு
முதுகில் குத்தாதீர்.
பெயரைக்கூடச் சொல்லாமல்
பெரிதாய் வேறென்ன
சொல்லிவிடப் போகிறீர்கள்.
நேருக்கு நேர்வந்து
நிறைய பேசுங்கள்.//

முக்கால்வாசி பதிவர்கள் முகமூடி போட்டுக்கொண்டு உலாவுகிறார்கள். என்ன காரணமோ தெரியவில்லை?

எம் அப்துல் காதர் சொன்னது…

//"பெயரில்லாப்" பெரியவர்கள்//
அனைவர்களும் முகத்தில் மறு ஒட்டிக்கிட்டு திரியுறாங்க பாஸ். அதில் ஒரு சந்தோசம் அவர்களுக்கு விடுங்கள். நல்லா சொல்லியிருக்கிறீங்க உள்ளக் கிடக்கையை. ஆனா டிஸ்கி கொஞ்சம் ஓவர் தானோ?? ஹி ஹி

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

"பெயரில்லாப்" பெரியவர்களே
முகமூடி அணிந்துகொண்டு
முதுகில் குத்தாதீர்.
பெயரைக்கூடச் சொல்லாமல்
பெரிதாய் வேறென்ன
சொல்லிவிடப் போகிறீர்கள்.
நேருக்கு நேர்வந்து
நிறைய பேசுங்கள்.

------------
சைக்கோக்கள்..

கோழைகள்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

//பிறக்கின்ற குழந்தைக்கு
பெண்ஊட்டும் தாய்ப்பால்போல்
பதிவுலகில் இடுகைக்கு
பின்னூட்டம் அவசியம்.//

புட்டி பால் ஏதாவது இருக்கா?

என்னது நானு யாரா? சொன்னது…

///படிக்கின்றப் பதிவுகளில்
கருத்துப் பிழையிருப்பின்
திட்டிச் சொல்லுங்கள்
கரும்பாய் இனித்திருப்பின் - முதுகில்
தட்டிச் செல்லுங்கள்.///

Disclaimer-ல இருக்கிற ஜோக் அருமை! ஒரு குபுக் சிரிப்பு :-)

எளிய நடையில அருமையா எழுதியிருக்கீங்க! அருமை நண்பரே!

நம்ப பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சி போல இருக்கே!

உங்கள மாதிரி நண்பர்கள் ஊக்கம் இருந்தா தானே நல்லா எழுத வரும். உங்க கவிதையில அதை தானே சொல்லி இருக்கீங்க!

புது சரக்கு வந்திருக்கு. வந்து படிச்சி பாத்து தேறுமா தேறாதான்னு சொல்லுங்க பாஸு! அப்படியே Follower ஆகிடுங்க! உங்களுக்கு அடிக்கடி நினைவு படுத்த வேண்டாம் பாருங்க!

Jey சொன்னது…

பின்னூட்டம் போட்டாச்சி.
வரும்போதெல்லாம் ஏதாவது கவிதை எழுதி வச்சிருக்கீக அதான்..ஓட்டு மட்டு போட்டுட்டு எஸ் ஆயிருவேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

தாய்ப்பால் ந்னு சொல்லிட்டீங்க.. அதனாலேயே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அது தேவைப்படாத
லெவலுக்கும் நாம் வந்துவிடவேண்டும் என்றும் ஆகிறது.. :)

சேலம் தேவா சொன்னது…

புதிய பதிவர்கள் எல்லாம் இத அப்டியே காப்பி பண்ணி அவங்க blogல அப்டியே போட்டுவைக்கலாம்...சூப்பர்ண்ணே...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

"பெயரில்லாப்" பெரியவர்களே
முகமூடி அணிந்துகொண்டு
முதுகில் குத்தாதீர்.
பெயரைக்கூடச் சொல்லாமல்
பெரிதாய் வேறென்ன
சொல்லிவிடப் போகிறீர்கள்.
நேருக்கு நேர்வந்து
நிறைய பேசுங்கள்.

//

கோழைகள்...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

படிக்கின்றப் பதிவுகளில்
கருத்துப் பிழையிருப்பின்
திட்டிச் சொல்லுங்கள்
கரும்பாய் இனித்திருப்பின் - முதுகில்
தட்டிச் செல்லுங்கள்.



//


இது தான்.. இதே தான்.. எனக்கும் தேவை.. என்னைப் போன்ற புதியவர்களுக்கும் தேவை..

Chitra சொன்னது…

ஆஹா...... கலக்குறீங்களே! சூப்பர்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவிதையாய் ஒரு வேண்டுகோள் - செவிசாய்க்காமல் இருக்க முடியுமோ! பின்னூட்டம் ஒருவித சத்துமருந்து தான் - அடுத்த பதிவுகளுக்கு. வாழ்த்துக்கள்.

வெங்கட்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

பின்னூட்டம் அப்படின்ற பேர்ல தனக்கு முன்னாடி இருக்குற பின்னூட்டத்தை அப்படியே காபி பேஸ்ட் பண்ணி போடறவங்களை சேர்த்திருக்கலாம்...

இந்த பின்னூட்ட கவிதை புதுசுகளுக்கு சரி..

sakthi சொன்னது…

பின்னூட்டத்திற்காய் ஒரு கவிதையா நல்லாயிருக்குங்க!!!

அருண் பிரசாத் சொன்னது…

அனானிகளை கண்டுக்காதீங்க பாஸ். மாடரேஷன் போட்டு டெலிட் பண்ணிடுங்க. இவங்க திருந்த மாட்டாங்க.

அப்புறம் ஒரு fake profile வச்சுட்டு வந்து வீம்புபண்ணுவாங்க, டெலிட் பண்ணுறதுதான் பெட்டர்

செல்வா சொன்னது…

//தொடர்ந்து எழுத
தெம்பு கொடுங்கள் //
கண்டிப்பா கொடுக்குறேங்க..
//நான் ஒரு தடவை போஸ்ட் பண்ணிட்டா அப்புறம் நான் எழுதனத நானே படிக்க மாட்டேன்//
நானும் உங்க இனம் தாங்க ..
நல்லா இருக்குங்க. ஒவ்வொரு பதிவிற்கும் பின்னூட்டம் எவ்வளவு தெம்பு கொடுக்கும் எனது எனக்குத் தெரியும். சில சமயங்களில் பதிவு போட்டுவிட்டு அடுத்தநாள் காலை வருவதற்குள் எத்தனை எதிர்பார்ப்புகள்..

பின்னோக்கி சொன்னது…

மன்னிச்சுக்கோங்க.. படிச்சுட்டு இனிமே பின்னூட்டம் போடாம போகமாட்டேன். முன்னாடி அப்படி எதாவது பண்ணியிருந்தா தயவுசெஞ்சு மன்னிச்சுடுங்கோவ்வ்வ்வ்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நேர்படப் பேசும் துணிவற்ற பெயரில்லாப் பின்னூட்டங்களுக்குச் சாட்டையடி தருகிறது கவிதை.
பெரும்பாலும் இத்தகைய பின்னூட்டங்கள் தங்கள் மேதாவித் தனத்தைக் காட்டுவதற்காக மட்டுமே எழுதப்படுபவை.நாம் தரும் பதிலில் அவர்களுக்கு உண்மையான அக்கறை இருப்பதில்லை.இவற்றைப் பொருட்படுத்திப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தால் நமக்கு நேரவிரயம் மட்டுமே எஞ்சும்.

மோகன்ஜி சொன்னது…

நல்ல கவிதை.பின்னூட்டங்கள் தேவைதான்.சிலருக்கே அது 'பின்னூட்டமாய்'இல்லாமல்,'பின்கூட்டமாய்' அமைகிறது. ஏது இருந்தாலும் இல்லாவிட்டாலும், நல்ல எழுத்து நிலைத்திருக்கும் படிப்பவர் மனதில். வாழ்த்துக்கள்
மோகன்ஜி,ஹைதராபாத்

உயிரோடை சொன்னது…

பின்னூட்ட‌த்துக்கு என்ன‌ பின்னூட்ட‌ம் போற‌து?

அம்பிகா சொன்னது…

\\டிஸ்கி: நான் ஒரு தடவை போஸ்ட் பண்ணிட்டா அப்புறம் நான் எழுதனத நானே படிக்க மாட்டேன். நீங்களாவது படிச்சு பின்னூட்டம் போடுங்க...\\
பின்னூட்டங்களையாவது படிப்பீங்க தான!

அன்புடன் நான் சொன்னது…

மிக அருமையா சொல்லியிருக்கிங்க.... பாராட்டுக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நல்லா இருக்குங்க. குறை ஒன்றும் இல்லை. இப்ப நான் என்ன பண்ணட்டும்...

vanathy சொன்னது…

//"பெயரில்லாப்" பெரியவர்களே
முகமூடி அணிந்துகொண்டு
முதுகில் குத்தாதீர்.
பெயரைக்கூடச் சொல்லாமல்
பெரிதாய் வேறென்ன
சொல்லிவிடப் போகிறீர்கள்.
நேருக்கு நேர்வந்து
நிறைய பேசுங்கள்.//
super!!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//டிஸ்கி: நான் ஒரு தடவை போஸ்ட் பண்ணிட்டா அப்புறம் நான் எழுதனத நானே படிக்க மாட்டேன். நீங்களாவது படிச்சு பின்னூட்டம் போடுங்க... ///

அட அட.. பதிவுலகம் பற்றிய உங்கள் கவிதை சூப்பர்..

அதை விட...டிஸ்கி... செம செம.. :-))))))

ராஜவம்சம் சொன்னது…

பயபுள்ள சரியாதாயா சொல்றான்.

ஸாதிகா சொன்னது…

//தட்டத் தட்டத்தான்
தங்கம் நகையாகும் - நீங்கள்
சுட்டச் சுட்டத்தான்
சொற்குவியல் கவியாகும்.
// அருமையான சொற்கோவை

R. Gopi சொன்னது…

உங்கள் கோரிக்கை நியாயமானது. எந்த விதமான பதிவாக இருந்தாலும் அதற்குப் பின்னூட்டம் மிக அவசியம். மனித மனம் ஏங்குவது recognition என்ற ஒன்றுக்குத்தான்.

நான் ஒரு பதிவரின் வலைப்பூவில் பார்த்தது இது. நிறைய பின்னூட்டம் இட்டவர்களின் பெயர்கள் தோன்றுகின்றன. நீங்களும் அதைச் செய்யலாம். பின்னோட்டம் இடுபவர்களை நீங்கள் recognise செய்வதும் நல்ல விஷயம்தானே.

தூயவனின் அடிமை சொன்னது…

உள்ளதை உள்ளபடி சொல்லி உள்ளீர்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கலக்கலான கவிதை.. எப்படித்தான் இப்படியெல்லாம்?.. ம்ம்ம்ம்.. :)))

கவிதை வாயிலாக பின்னூட்டம் இட வைத்துவிட்டீர்கள்..

Unknown சொன்னது…

எம் அப்துல் காதர் சொன்னது…
//டிஸ்கி கொஞ்சம் ஓவர் தானோ?? ஹி ஹி//

ஹி ஹி.அது சும்மா தமாசுங்க....அடுத்த பதிவு எழுதும் வரை முந்தய பதிவை ஒரு முன்னூறு தடவை பார்ப்பேன்.

Unknown சொன்னது…

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது...
புட்டி பால் ஏதாவது இருக்கா?//

இருக்கே....எதிர்பதிவு, அதிர் கவுஜ, புனைவு, சொற்சித்திரம் இப்படி நிறைய....

Unknown சொன்னது…

//என்னது நானு யாரா? சொன்னது…
நம்ப பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சி போல இருக்கே!......புது சரக்கு வந்திருக்கு. வந்து படிச்சி பாத்து தேறுமா தேறாதான்னு சொல்லுங்க பாஸு! அப்படியே Follower ஆகிடுங்க! உங்களுக்கு அடிக்கடி நினைவு படுத்த வேண்டாம் பாருங்க!//

மண்குளியல் முடிச்சாச்சு. நான் இப்போ உங்க followerங்க.....

Unknown சொன்னது…

Jey சொன்னது…
//வரும்போதெல்லாம் ஏதாவது கவிதை எழுதி வச்சிருக்கீக அதான்..ஓட்டு மட்டு போட்டுட்டு எஸ் ஆயிருவேன்...//

வலைப்பூ தொடங்குனதே அதுக்குத்தாங்க.....

Unknown சொன்னது…

வெறும்பய சொன்னது…
//இது தான்.. இதே தான்.. எனக்கும் தேவை.. என்னைப் போன்ற புதியவர்களுக்கும் தேவை.//

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…
//இந்த பின்னூட்ட கவிதை புதுசுகளுக்கு சரி..//

சரியாச் சொன்னிங்க...

Unknown சொன்னது…

//எம்.ஏ.சுசீலா சொன்னது…

நேர்படப் பேசும் துணிவற்ற பெயரில்லாப் பின்னூட்டங்களுக்குச் சாட்டையடி தருகிறது கவிதை.
பெரும்பாலும் இத்தகைய பின்னூட்டங்கள் தங்கள் மேதாவித் தனத்தைக் காட்டுவதற்காக மட்டுமே எழுதப்படுபவை.நாம் தரும் பதிலில் அவர்களுக்கு உண்மையான அக்கறை இருப்பதில்லை.இவற்றைப் பொருட்படுத்திப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தால் நமக்கு நேரவிரயம் மட்டுமே எஞ்சும்.//

அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையான வரிகள். சுசீலா அம்மாவிற்கு நன்றி.

Unknown சொன்னது…

அம்பிகா சொன்னது…
//பின்னூட்டங்களையாவது படிப்பீங்க தான!//

போஸ்ட் பண்ணிய நிமிடத்தில் இருந்து பின்னூட்டதிற்காய் காத்திருக்கும் மனது. அது தான் இந்தக் கவிதையே.

Unknown சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
//நல்லா இருக்குங்க. குறை ஒன்றும் இல்லை. இப்ப நான் என்ன பண்ணட்டும்...//

நல்லா இருக்குங்கறதை நல்ல இருக்குனும் சொல்லலாம் நீங்க சொல்றா மாதிரியும் சொல்லலாம்.

சீமான்கனி சொன்னது…

//படிக்கின்றப் பதிவுகளில்
கருத்துப் பிழையிருப்பின்
திட்டிச் சொல்லுங்கள்
கரும்பாய் இனித்திருப்பின் - முதுகில்
தட்டிச் செல்லுங்கள்.//

ஆஹா பின்னுட்டத்தை பத்தி பின்னிடீங்க அண்ணே...அசத்திடேல் போங்கோ...அதி சரி..என்ன?இந்த டிஸ்கி பெருல ஏதோ பஞ்சு 'ச்சே' பஞ்ச்-லாம் வருது....

க.பாலாசி சொன்னது…

நீங்க சொல்றது நிஜம்தானுங்க... பின்னூட்டங்களில்லைன்னா எழுதவே தோன்றதில்லைங்க சிலநேரம்...

vasan சொன்னது…

//பெயரைக்கூடச் சொல்லாமல்
பெரிதாய் வேறென்ன
சொல்லிவிடப் போகிறீர்கள்.//

பெய‌ரை ப‌திவு ப‌ண்ணியாச்சு நேச‌த்துட‌ன்,
க‌லா நேச‌னுக்கு.

இரகுராமன் சொன்னது…

ovvoru line um anubavichi eluthi irukeenga
pola :)

arumaiyaa irukku anna :)

பத்மா சொன்னது…

பின்னூட்டதிற்கு பின்னூட்டம் போட்டாச்சு ..okya

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்லாயிருக்கு:)!

முனியாண்டி பெ. சொன்னது…

நான் ரசித்த பின்னூட்டம் என்று பின்னூட்டம் இட்டு சொல்கிறேன்

பெயரில்லா சொன்னது…

//தங்கம் நகையாகும் - நீங்கள்
சுட்டச் சுட்டத்தான்
சொற்குவியல் கவியாகும்.//

உண்மை... இவ்வளவு எளிமையாக அழகாக ஒரு கவிதை எழுதி உள்ளீர்கள். மனதைக் கவர்ந்தது.

vinthaimanithan சொன்னது…

நல்லாருக்கு.. ஒவ்வொரு உயிரும் அங்கீகாரத்துக்குத்தானே ஏங்குது!

கே. பி. ஜனா... சொன்னது…

நல்லாயிருக்குங்க..

'பரிவை' சே.குமார் சொன்னது…

//டிஸ்கி: நான் ஒரு தடவை போஸ்ட் பண்ணிட்டா அப்புறம் நான் எழுதனத நானே படிக்க மாட்டேன். நீங்களாவது படிச்சு பின்னூட்டம் போடுங்க...
//

athu sari.

எளிமையாக அழகாக ஒரு கவிதை எழுதி உள்ளீர்கள்... மனதைக் கவர்ந்தது.

Quote

Followers