போலியோ......போலியோ?
அண்மையில் நண்பர் பனித்துளி சங்கர் ஒரு பதிவில் 'எப்பொழுதெல்லாம் நாம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க செல்கிறோமோ அப்பொழுது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு முன்பும் , பின்பும் தாய் பால் என்றால் இரண்டு மணிநேரத்திற்கும் , புட்டிப்பால் என்றால் ஒருமணிநேரத்திற்கும் கொடுத்தல் கூடாது' என்று எழுதி இருந்தார். இது சம்பந்தமான ஆராய்ச்சி கட்டுரைகளின் முடிவில் தாய்பால் மற்றும் புட்டிப்பாலுக்கும் போலியோ சொட்டு மருந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே சொல்லப்பட்டுள்ளது. இந்த விவாதத்திற்கு தன் பதிவின் மூலம் திரி கிள்ளிய சங்கருக்கும், மருத்துவ ஆதாரங்களுடன் அப்பதிவில் பின்னூட்டமிட்ட புருனோவிற்கும் மற்றும் தேடி வந்து தகவல் சொன்ன நண்பார் SUREஷ் (பழனியிலிருந்து) க்கும் நன்றிகள். செடிகள் நடுவோம்
அண்மையில் அலுவலக வி(ஜ)சயமாய் நானும் மூன்று ஜப்பான் நண்பர்களும் சண்டிகர் சென்றிருந்தோம். அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் எங்கள் பனி முடிந்ததும் ஒரு வித்தியாசமான நிகழ்வு நடந்தது. ஒரு மரக்கன்றை அந்த வெளிநாட்டு நண்பர்கள் மூலம் தொழிற்சாலையினுள் நட்டார்கள். இவ்வாறு அங்கு பார்வையாளராக வருபவர்களைக் கொண்டு ஏராளமான மருத்துவ மூலிகைகளும் மரக்கன்றுகளும் நட்டு வளர்க்கிறார்கள்.மரங்களால் நமக்கு நன்மைகள் ஏராளம். உண்ணக் கனி தரும். உயிர் வாழ ஆக்சிஜன் தரும். மண்சரிவை தடுக்கும். மழை தரும். மருந்து தரும். நிழல் தரும். கதவு தரும். ஜன்னல் தரும். எழுதக் காகிதம் தரும். இறந்தால் விறகு தரும். மரித்தால் நிலக்கரி தரும். இப்படி ஏராளமாய்த் தருவதால் தான் மரத்தைத் தரு என்றானோ தமிழன். சரி இதெல்லாம் விடுங்க இத விட மிக்கியமான ஒரு பிரச்சனை வராம தடுக்கனும்னா நீங்க கண்டிப்பா மரம் வளர்க்கனும். (அதுக்கு செடி நடனும்). அந்த பிரச்சனை இதோ.....
சுதந்திரம்
விளையாட்டுப் பள்ளி (play school) செல்லும் என் இருவயது மகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு உடையலங்காரப் போட்டி அதாங்க fancy dress. சரி என்னடா செய்யறதுன்னு யோசிச்சுகிட்டே உடைகள் வாடகைக்குத் தரும் கடைக்கு சென்றால் அங்கு தீபாவளி வார ரங்கநாதன் தெருவெனக் கூட்டம் அலை மோதியது. அப்பதான் தெரிந்தது சுதந்திர தினத்துக்கு இந்த ஊரில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இதே தீமில் அதாவது விடுதலைப் போராட்ட வீரர்கள் போல உடை அணித்து வரச் சொல்லி இருக்கிறார்கள். எல்லோரும் நாலு வயசு காந்தி, எழு வயசு நேரு, ஆறு வயசு போஸ் என உடைகள் வாங்கிச் சென்றனர். எந்தக் கடையிலும் என்மகளுக்கென உடை கிடைக்கவில்லை.(மொத்தமே மூணு கடைதான் அதிலும் முன்னூறு பேர் கூட்டம்).
அப்புறம் புதிதாய் ஒரு வெள்ளை பைஜாமாவும் தனியே தொப்பியும் வாங்கினோம். சிவப்பு ரோஜா (ஹேர் கிளிப்) ஒன்றும் வாங்கினோம். (எல்லோரும் தீபாவளி பொங்கல்னா தான் புதுத் துணி எடுப்பார்கள், நம்ம வீட்ல தான் இண்டிபெண்டன்ஸ் டேக்கு என்றாள் மனைவி). அப்புறமென்ன நேற்று என் மகள் நேருவானாள்.
தத்துவம்
சொற்கள் தேனீக்கள் போன்றவை அதில் தேனுமுண்டு கொடுக்குமுண்டு!
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
23 comments:
அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
படமும் கருத்தும் கலக்கல்....ஜூனியர் அழகு...தத்துவம் ஐ!!!!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நேசன் அண்ணே...
perumbalum sankar enra peyar ullavargal ellam purudakkalaga iruppargal polum.
azhgiri
singapore
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
அழகான நேரு!
நேரு பிரமாதம் ... மகளுக்கு வாழ்த்துக்கள் ...
போலியோ பற்றிய தகவல்.
மரம் இல்லைன்னா ரொம்ப கஷ்டம்
என கூட்டாஞ்சோறு நல்லாயிருக்கு
உங்க மகள் செம க்யூட்
Nehru Superappu...
சுதந்திர தின வாழ்த்துக்கள்..நபரே..
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.. உங்க செல்ல மகளூக்கு என்னுடைய வாழ்த்துகளை சொல்லிடுங்க..
நேரு சூப்பர்..:).
ஆமாண்ணே, ரெண்டாவது படத்துல பயபுள்ளக எதுக்கு கியூல நிக்கிதுக?, மரத்துக்கு தன்ணி ஊத்தி வளர்க்கவா?
கலக்கலான கூட்டாஞ்சோறு. சுதந்திர தின வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.
வெங்கட்.
//மரங்களால் நமக்கு நன்மைகள் ஏராளம். உண்ணக் கனி தரும். உயிர் வாழ ஆக்சிஜன் தரும். மண்சரிவை தடுக்கும். மழை தரும். மருந்து தரும். நிழல் தரும். கதவு தரும். ஜன்னல் தரும். எழுதக் காகிதம் தரும்.///
உண்மைலையே மரம் வளர்ப்பது ரொம்ப அவசியமான ஒன்று ..!!
க்யூட்டான படங்கள் & தகவல்கள்.
சார்,
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு INVITE செய்திருக்கிறேன்.
நேரம் இருப்பின் எழுதுங்கள்.
மனோ
//ஆமாண்ணே, ரெண்டாவது படத்துல பயபுள்ளக எதுக்கு கியூல நிக்கிதுக?, மரத்துக்கு தன்ணி ஊத்தி வளர்க்கவா?//
ஆமாண்ணே எனக்கும் அந்த டவுட் வந்தது. jey சொன்னா சிரிப்பா இருக்கும் நான் கேட்டா தப்பாப் போய்டுமோன்னு....!
உங்கள் மகள், ரொம்ப cute ஆக இருக்கிறாள்.
கல கல தொகுப்புங்க.... நன்றி.
நல்ல பதிவு. போலியோ மருந்து கொடுத்த பின்னர் மருத்துவர் என் பிள்ளைகளுக்கு எந்த வித கட்டுப்பாடுகளும் சொல்லவில்லை. நானும் வழக்கம் போலவே பால் கொடுத்தேன்.
நேரு அழகாக இருக்கின்றாள். என்ன பரிசு குடுத்தார்கள்?
ஆமா நேரு ஏன் அழறாங்க கலா நேசன்.. சாக்லெட் கொடுக்கலையா..
//இவ்வாறு அங்கு பார்வையாளராக வருபவர்களைக் கொண்டு ஏராளமான மருத்துவ மூலிகைகளும் மரக்கன்றுகளும் நட்டு வளர்க்கிறார்கள்//
ரொம்ப நல்ல ஐடியா-வா இருக்கே...!!
குழந்தை நேரு... ரொம்ப சூப்பர்..
ஏன் சோகம்??
நேரு ஏன் அழுதுட்டு இருக்கார்?
தகவல்கள் அருமை.
கருத்துரையிடுக