ஞாயிறு, 6 மார்ச், 2011
சனி, 5 மார்ச், 2011
வரி விளையாட்டு
மகேஷ் பூபதியும் அவரின் முதல் மனைவி ஸ்வேதா ஜெய்சங்கரும்னு சரியாச் சொன்னவங்களுக்கு வாழ்த்துக்கள்.
மகேஷ் பூபதி- பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் வென்ற முதல் இந்தியன். இன்னும் ஏராளமான டென்னிஸ் போட்டிகளில் பெரும்பாலும் இரட்டையர் பிரிவில் கலக்கியவர். 2001 ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ வாங்கியவர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு போனமாதம் (16 .02 .2011 ) லாரா தாத்தாவை மணந்தார். அப்புறம் முதல் மனைவியும் அடுத்த சில நாட்களிலேயே (20 .02 .2011 ) சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரகு கைலாசை மணந்தார். (அட நான் சொல்ல வந்ததை விட்டு பதிவு வேறு எங்கேயோ போகுதே!)
திங்கட்கிழமை திரு பிரணாப் முகர்ஜி வாசித்த பட்ஜெட்டில் நமக்கு ஏதேனும் சலுகை இருக்கிறதா என் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருப்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்குத் தான் இந்தப் பதிவு.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.
இப்படி ஒரு பையன் மகனாகப் பிறப்பதற்கு அவன்தந்தை என்ன புண்ணியம் செய்தானோ என ஏங்கும் படியான ஒரு ஒப்பந்தத்தில் தந்தையும் மகனும் 10.06.1994 ல் கையெழுத்து போட்டனர். அந்த ஒப்பந்தத்தின்படி உணவு, உடை, உறைவிடம், டென்னிஸ் பயிற்சி மற்றும் டிப்ஸ் என தந்தை செலவழித்த 28.5 லட்சத்தை தான் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்குள் திருப்பித் தருவதாக எழுதினர். இது தந்தைக்குத் தான் அளிக்கும் குருதட்சணை என்றும் அதற்கு வரிவிலக்கு அளிக்குமாறும் முறையிட்டார் பூபதி. வருமான வரித்துறையும், கர்னாடக உயர்நீதி மன்றமும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை 25.10.2010 அன்று விசாரித்த தலைமை நீதிபதி SH கபாடியா, நீதிபதிகள் KS ராதாக்ருஷ்ணன் மற்றும் ச்வத்தந்த குமார் அடங்கிய பென்ச் ஐந்தே நிமிடங்களில் தள்ளுபடி செய்தது. அதை தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள்....
மகனுக்கு நல்ல புத்தி சொல்லி அவன் சுயமாய் சம்பாதிக்கும் வரை அவனைக் காப்பது தந்தையின் கடமை. இந்த நீதிமன்றம் இதுபோல் ஒரு வழக்கை இதற்குமுன் பார்த்ததில்லை.
1989 ல் இருந்து 1994 வரையான காலத்தில் டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளங்கிய போதும், இந்த ஒப்பந்தம் 1994 ல் செய்தது வரி விலக்கை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்பதை தெளிவாக்குகிறது.
(பய புள்ள டென்னிஸ் கோர்ட்ல மட்டுமல்ல சுப்ரீம் கோர்ட்லயும் நல்லாத்தான் விளையாண்டிருக்கு)
Labels:
சமூகம்,
நிகழ்வுகள்,
பொது
செவ்வாய், 1 மார்ச், 2011
மறுபடியும் மகளானேன்!
வட்டநிலா வானில்
வந்தவுடன் போனதுபோல்
மொட்டு மலரொன்று
முகம்காட்டி மறைந்ததுபோல்
கட்டுக்கரும்பது கைக்
கிட்டியதும் கசந்ததுபோல்
தொட்டில் நெடுங்கனவே
தொலைதூரம் ஏன்போனாய்?
கட்டிய கயவனவன்
கைவிட்டுப் போனபின்
ஒட்டி உறவாட
ஒற்றையுயிர் நீயிருப்பாய்
கெட்டுப் போகவில்லை
வாழ்வென்றே நினைத்திருந்தேன்
பட்டுமலர் உனையிறைவன்
படைத்ததுமேன் பறித்துக்கொண்டான்?
படைத்ததுமேன் பறித்துக்கொண்டான்?
விழியாரப் பார்க்கவில்லை
விரல்பிடித்து நடக்கவில்லை
விளையாடிச் சிரிக்கவில்லை
விடியலென வந்தவனே
விட்டிலாகி ஏன் மறைந்தாய்?
பிறந்தவுடன் இறந்துவிட்டப்
பிள்ளைக்குநான் தாயுமில்லை
ஏமாற்றிய கணவனுக்கு
இன்றுநான் மனைவியில்லை
வாடுமென் அம்மாவுக்கு
வருத்தந்தரும் மகளானேன்.....
சனி, 26 பிப்ரவரி, 2011
மத்திய அரசு தடை செய்துள்ள மருந்துகள்
10.02.2011 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கீழ்காணும் மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் உடனடியாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
- Nimesulide formulations for human use in children below 12 years.
- Cisapride and its formulations for human use.
- Phenylpropanolamine and its formulations for human use.
- Human Placental Extracts and its formulations for human use.
- Sibutramine and its formulations for human use.
- R-Sibutramine and its formulations for human use.
இவற்றில் பெரும்பாலான மருந்துகள் மற்ற நாடுகளில் பல வருடங்களுக்கு முன்னரே தடை செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு நிமுசுலைட். இது வலி நிவாரணியாகவும் சில சமயங்களில் காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா (USFDA ), கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகள் இதை விற்க அனுமதியே அளிக்கவில்லை. ஈரல் குறைபாடு ஏற்படுவது உறுதியானதும் இந்த மருந்தைக் கண்டுபிடித்த ச்விசர்லாந்திலேயே குழந்தைகளுக்கு இம்மருந்து தடை செய்யப்பட்டது. பங்களாதேசில் கூட 2005 லேயே இம்மருந்து தடைசெய்யப்பட்டது.
மத்திய அரசின் அறிவிப்பு இங்கே
.
Labels:
சமூகம்,
துறை சார்ந்த பதிவுகள்
புதன், 23 பிப்ரவரி, 2011
மனப்பெண்
கல்லூரிக் காலத்தில்
காதலிக்கும் யோகமில்லை
அலுவலகம் வந்தபின்
அமையுமென்றும் நினைக்கவில்லை!
உண்டு குடித்து உறங்கி
ஊர்சுற்றித் திரிந்தபோதும்
கண்டுகொள்ளவேயில்லை என்னுள்
காதல் விதை உறங்கியதை!
உன்புன்னகை சிந்திய
பொன்னொளி பட்டதும்
உறங்கிய விதையது
உயிர்பெற்றது விருட்சமாய்!
எப்படிச் சொல்வதென்று
எண்ணித் தவிக்கையில்
தேவதை நீயே
தித்திக்கும் வரம்தந்தாய்!
வாகனத்தில் உடனமர்ந்து
வருவதற்கே தயங்கியவள்
வாழ்க்கை முழுவதுமே
உடன்வர சமதித்தாய்!
நீயென் மூச்சுக்காற்றில்
ஊதிய பந்து
முதல்முதல் பாடிய
காவடிச் சிந்து!
மழைத்துளி தீண்டலில்
மணக்கின்ற பூமியாய்
மனதுக்குள் மலர்வெடிக்க
மகிழ்ந்தேன் நான்!
இன்று
மனப்பெண்ணே
என்னருகில்
மணப்பெண்ணாய்........
காதலிக்கும் யோகமில்லை
அலுவலகம் வந்தபின்
அமையுமென்றும் நினைக்கவில்லை!
உண்டு குடித்து உறங்கி
ஊர்சுற்றித் திரிந்தபோதும்
கண்டுகொள்ளவேயில்லை என்னுள்
காதல் விதை உறங்கியதை!
உன்புன்னகை சிந்திய
பொன்னொளி பட்டதும்
உறங்கிய விதையது
உயிர்பெற்றது விருட்சமாய்!
எப்படிச் சொல்வதென்று
எண்ணித் தவிக்கையில்
தேவதை நீயே
தித்திக்கும் வரம்தந்தாய்!
வாகனத்தில் உடனமர்ந்து
வருவதற்கே தயங்கியவள்
வாழ்க்கை முழுவதுமே
உடன்வர சமதித்தாய்!
நீயென் மூச்சுக்காற்றில்
ஊதிய பந்து
முதல்முதல் பாடிய
காவடிச் சிந்து!
மழைத்துளி தீண்டலில்
மணக்கின்ற பூமியாய்
மனதுக்குள் மலர்வெடிக்க
மகிழ்ந்தேன் நான்!
இன்று
மனப்பெண்ணே
என்னருகில்
மணப்பெண்ணாய்........
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011
கனவு

வானவில் தானெடுத்து
வளையல்கள் செய்தலின்று
வழக்கமாகியது எனக்கு!
மனதே உன்னுடன் நான்
மகிழ்ச்சியாய் குடித்தனம்
மணல்வீட்டில் நடத்துகிறேன்!
காண்கின்ற காட்சியெல்லாம்
கண்ணே உன் முகம்காட்டி
களிப்புறச் செய்யுதடி!
எழுதலாம் என்று
எடுக்கின்ற தாளிலெல்லாம்
உன்பெயர் மட்டுமெழுதி
உலகையே மறக்கின்றேன்!
இவையெல்லாம் இங்கு
இனிதே நடக்கிறது
எவரும் வந்து
என்னை எழுப்பாதவரை.....
(1999)
திங்கள், 14 பிப்ரவரி, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
-
►
2010
(47)
- ► செப்டம்பர் (5)





