Google+ Followers

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

இ மெயிலைக் கண்டுபிடித்தவர் தமிழன்தனது 14-ஆவது வயதில் இ மெயிலைக் கண்டுபிடித்த சாதனையாளர் ஓர் தமிழன். அமெரிக்காவில் வசிக்கும் அந்த ராஜபாளையத்துக்காரரின் பெயர் சிவா அய்யாதுரை. அவரைப் பற்றி நான் வாசித்த சில தகவல்கள்...

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள "யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி'யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்த போது இவர் உயர்நிலைப்பள்ளி மாணவர். அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று தோன்றியபின்
தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினார் . அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தார் .

இவர் இந்த E MAIL -ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.

இவர்தான் தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவர் . FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி அதை உருவாக்கினார் . இது DATABASE, LAN(LOCAL AREA NETWORK) உடன் தொடர்புடையதாக இருந்தது. இ மெயில் என்பது டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. அது ஒரு ஸிஸ்டம். இ - மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY எல்லாம் இவர் உருவாக்கியவை.

இவரது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை வாங்க 1982 இல் அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தை அணுகினார் . அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி என்று ஆலோசனை கூறக் கூட அப்போது யாரும் இல்லை. அவருக்கு அப்போது 19 வயது. 1982 ஆகஸ்ட் 30 இல் இ - மெயிலைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமை கிடைத்தது.

ஆனால் பலர் தாங்கள்தாம் இ - மெயில் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொண்டனர். ஆனால் இ - மெயில் கண்டுபிடிக்க இவர் செய்த முயற்சிகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக அளவில் புகழ்பெற்ற மொழியியல், தத்துவத்துறைப் பேராசிரியர் நோம் சாவ்ஸ்கி. இவர்தான் தான் இ மெயில் கண்டுபிடித்தவர் சிவா அய்யாதுரை என்று அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். இவர் கண்டுபிடிப்பதற்கு முன்பு இ மெயில் என்ற சொல் உலகத்தில் எந்த அகராதியிலும் இல்லை.

இ - மெயிலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம் என்று சிவா சொன்ன காரணங்கள்...
  • நான் ஓர் இந்தியன்,
  • நான் புலம் பெயர்ந்தவன்
  • தமிழன்
  • கறுப்புநிறத்தவன்
  • நெவார்க் என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவன்
இவற்றைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை.

அதற்குப் பின்பு  இவர்தான் இ - மெயிலைக் கண்டுபிடித்தவர்  என்பதை உலக அளவில் புகழ்பெற்ற "சுமித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்"அங்கீகரித்தது. இ - மெயிலை இவர் கண்டுபிடிக்கும்போது பயன்படுத்திய நாடாக்கள், பதிவுகள், காப்புரிமை மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளில் உள்ள Code கள் எல்லாவற்றையும் அங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இவரை Dr.Email என்றே குறிப்பிடுகிறது.5 comments:

karikaalan சொன்னது…

good post ,i proud of him.

G.M Balasubramaniam சொன்னது…


குடத்திள்ள விளக்கு போலிருப்பவரை குன்றின் மேல் ஏற்றும் பதிவு இது. செய்திப் பரிமாற்றத்துக்கு நன்றி கலாநேசன். வாழ்த்துக்கள்.

Jayadev Das சொன்னது…

நல்ல தகவல்!!

Siva.Anandhan சொன்னது…

thamiluku perumai sertha perunthagaiyalar ivar. vantharai vazha vaikum tamilnadu, ingu irukum nallavargalai thoorathuvathu ondrum namaku puthithalla. eathuvum irukum pothu athan arumai thamilanuku theriyathu enbatharku ithuvum oru example.

பெயரில்லா சொன்னது…

[url=http://viagraboutiqueone.com/#minwz]viagra online without prescription[/url] - buy viagra , http://viagraboutiqueone.com/#pyite order viagra

Quote

Followers